சிவகார்த்திகேயனின் 'டான்': அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

  • IndiaGlitz, [Monday,January 31 2022]

சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்த நிலையில் அவருடைய அடுத்த திரைப்படமான ’டான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ’டான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடக்ஷன் முடிவடைந்தது என்பதும் இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியானது.

இந்த நிலையில் தற்போது ’டான்’ திரைப்படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் டுவிட்டர் பக்கத்தில் அட்டகாசமான வீடியோ உடன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் இந்த படம் திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. ’டான்’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள்மோகன், ஷிவாங்கி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, பாலசரவணன், சூரி உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இந்த படத்தை லைகா மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன.
 

More News

முதல் வாரமே எலிமினேஷனுக்கு குறி வைக்கப்படும் வனிதா: நாமினேஷன் விபரங்கள்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமான அறிமுக நிகழ்ச்சியுடன் தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியில் நாம் எதிர்பார்த்தபடியே சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், நிரூப்,

இந்தியிலும் வசூல் சாதனை செய்த 'புஷ்பா': பாலிவுட் திரையுலகினர் ஆச்சரியம்!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி தமிழ் , தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியானது

ஒரு இளைஞரை திருமணம் செய்ய போட்டி போட்ட 2 பெண்கள்: இளைஞருக்கு நேர்ந்த பரிதாப முடிவு!

ஒரு இளைஞரை இரண்டு இளம் பெண்கள் மாறி மாறி காதலித்த நிலையில் இருவரும் திருமணம் செய்ய போட்டி போட்ட நிலையில் இந்தப் போட்டியில் பரிதாபமாக அந்த இளைஞர் பலியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அட்லி கொடுத்த ஞாயிறு முத்தம்: ப்ரியா பகிர்ந்த வைரல் புகைப்படம்!

பிரபல இயக்குனர் அட்லி தனது மனைவி பிரியாவுக்கு கொடுக்கும் முத்தம் குறித்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது

பிரபுதேவாவின் 'ரேக்ளா' படத்தின் கதை இதுதானா?

நடிகரும் நடன இயக்குனரும் இயக்குனருமான பிரபுதேவா சமீபத்தில் 'ரேக்ளா' என்ற திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார் என்பதும், இந்த திரைப்படத்தை சிபியின் 'வால்டர்' திரைப்படத்தை இயக்கிய அன்பு