close
Choose your channels

முதல் வாரமே எலிமினேஷனுக்கு குறி வைக்கப்படும் வனிதா: நாமினேஷன் விபரங்கள்!

Monday, January 31, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நேற்று பிரம்மாண்டமான அறிமுக நிகழ்ச்சியுடன் தொடங்கியது என்பதும் இந்த நிகழ்ச்சியில் நாம் எதிர்பார்த்தபடியே சுரேஷ் சக்கரவர்த்தி, அபிநய், நிரூப், வனிதா விஜயகுமார், பாலாஜி முருகதாஸ், ஜூலி, ஸ்ருதி, அனிதா சம்பத், தாமரை, ஷாரிக், தாடி பாலாஜி, சினேகன் மற்றும் அபிராமி ஆகிய போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்

இந்த நிலையில் இன்று இந்த வாரம் எலிமினேஷன் செய்வதற்கான நாமினேஷன் படலம் நடந்தது. இதில் பெரும்பாலானோர் வனிதாவை நாமினேஷன் செய்து முதல் வாரமே அவருக்கு குறி வைத்த்ள்ளனர்.

இன்றைய முதல் நாமினேஷன் படலத்தில் வனிதாவை அனிதா, பாலாஜி முருகதாஸ், அபிராமி உள்ளிட்டோர் நாமினேஷன் செய்தனர். வனிதா சக போட்டியாளர்களை உத்தரவு பிறப்பிப்பது போல் இருப்பதாக பாலாஜி முருகதாசும், அதேபோல் ’வனிதா என்ன நினைக்கிறார்களோ அதையே தான் மற்றவர்கள் பேச வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்’ என்று அனிதாவும் கூறினார்கள்.

அதேபோல் சினேகனை நாமினேட் செய்வதாக வனிதா மற்றும் பாலாஜி முருகதாஸ் கூறுகின்றனர். சினேகன் பாலாஜி முருகதாசை நாமினேட் செய்து, ‘பிசிக்கலாக அவரை என்னால் எதிர்கொள்ள முடியாது என்று நினைக்கிறேன் என்று கூறுகிறார்

அதேபோல் ஜூலியை நாமினேட் செய்த அனிதா, ‘ இன்னும் அவர் கம்போர்ட் ஜோனுக்குள் வரவில்லை என்று கூறுகிறார். அனிதா மிகவும் போலியாக இருப்பதாக கூறி வனிதா நாமினேட் செய்கிறார். சுரேஷை தாடி பாலாஜியும், ஜூலியை சுரேஷும் நாமினேட் செய்கின்றனர். மொத்தத்தில் இன்றைய நாமினேஷன் படலத்தில் வனிதா, அனிதா, ஜூலி உள்ளிட்டவர்கள் நாமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் முதல் வாரம் வெளியேறுவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.