கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு சிவகார்த்திகேயன் செய்த மாபெரும் உதவி

  • IndiaGlitz, [Tuesday,March 31 2020]

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தாராளமாக நிதி வழங்க வேண்டும் என மத்திய மாநில அரசுகள் பொதுமக்களை வலியுறுத்தி வருகின்றன. இதுகுறித்த வேண்டுகோளை பிரதமர் மற்றும் முதல்வர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர்.

இதனை அடுத்து தொழிலதிபர்களும் பாலிவுட் திரையுலக பிரபலங்களும் ஆந்திர மாநில நடிகர்களும் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் நிதி உதவி செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூபாய் 25 லட்சம் நிதியுதவி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெப்சி தொழிலாளர்களின் நலனுக்காக ரூபாய் 10 லட்சம் நிதி உதவி செய்தார் என்பது தெரிந்ததே. சிவகார்த்திகேயனை அடுத்து மேலும் சில நடிகர்கள் லட்சக்கணக்கில் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More News

கொரோனா பரவாமல் தடுக்க துப்பட்டா, கைக்குட்டைகளைப் பயன்படுத்துவது சரியா???

கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்து பாதுகாப்புகள் குறித்த எச்சரிக்கைகளும் அதிகரித்துள்ளன

ஈராக்; கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களை புதைப்பதற்குக் கூட இடமில்லையா???

ஈராக்கில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துக் கொண்டே வருகிறது

கொரோனா வருமுன் முன்னெச்செரிக்கையாக மருந்து எடுத்து கொண்ட டாக்டர் பலி

உலகம் முழுவதும் அதிகரித்து வரும் கொரோனா வைரசுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கவில்லை எனினும் மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தப்படும் குளோரோகுய்ன் மற்றும் ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் ஆகிய மருந்துகளை

டெல்லியில் இருந்து திண்டுக்கல் திரும்பிய 31 பேருக்கு கொரோனா பரிசோதனை

சமீபத்தில் டெல்லியில் நடந்த ஒரு மத நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட நிலையில் அவர்களில் பெரும்பாலானோருக்கு கொரோனா வைரஸ்

103 வயது பாட்டிக்கு சென்னையில் இருந்து வீடியோ காலில் இறுதிச்சடங்கு செய்த உதவி இயக்குனர்

சென்னையில் உதவி இயக்குனராக பணிபுரிந்து கொண்டிருக்கும் ஒருவர் உசிலம்பட்டியில் மறைந்த தனது பாட்டிக்கு காணொளி மூலம் இறுதி சடங்கு செய்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது