இன்னொரு வாட்டி என்னை ஏலியன்னு சொன்னே, மனுஷனா மாறிடுவேன்: 'அயலான்' டிரைலர்..!

  • IndiaGlitz, [Friday,January 05 2024]

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 2 நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ட்ரைலரில் உள்ள அசத்தலான காட்சிகள் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத ஒரு வித்தியாசமான ஏலியன் படமாக இந்த படம் இருக்கும் என்பது ஆரம்ப காட்சியில் இருந்தே தெரிய வருகிறது. இயற்கையையும் பூமியையும் சிதைக்கும் சுயநலவாதிகளை மனிதர்கள் தட்டிக்கேட்க வில்லை என்றால், இயற்கையையும், மனிதர்களையும் காக்க வேறு உலகில் இருந்து ஏலியன்களும் வருவார்கள் என்பதே இந்த படத்தின் ஒன்லைன் கதை.

இயற்கையை அழிக்க முற்படும் ஒரு கும்பலை தடுப்பதற்காக விண்ணுலகில் இருந்து வரும் ஏலியன், சிவகார்த்திகேயனுடன் இணைந்து செய்யும் சாகச நிகழ்வுகள் தான் இந்த படத்தின் முக்கிய அம்சம். இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது ஒவ்வொரு காட்சியிலும் பார்க்க முடிகிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள், சிவகார்த்திகேயன் ரகுல் பிரீத்தி சிங்கின் நடிப்பு, ரவிக்குமாரின் இயக்கம், ஏலியனை உருவாக்கிய தொழில்நுட்ப கலைஞர்களின் பணி என அனைத்து அம்சங்களும் பாசிட்டிவாக உள்ளதை அடுத்து இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், தமிழில் மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

More News

பணப்பெட்டியை எடுத்து சென்றவுடன் பூர்ணிமா வெளியிட்ட முதல் புகைப்படம்.. இணையத்தில் வைரல்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா  95 வது நாளில் 16 லட்ச ரூபாய் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

அவனுக்கு என் கண்ல பயம் தெரியுற வரைக்கும் தான் எனக்கு சேஃப்.. 'மிஷன் சாப்டர் 1' டிரைலர்..!

அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில்,  ஏஎல் விஜய் இயக்கத்தில் உருவான 'மிஷன் சாப்டர் 1'  என்ற திரைப்படம் வரும் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்று

இன்னிக்கு வந்தவன் நேத்து வந்திருந்தா பெட்டியை எடுத்துட்டு கிளம்பியிருப்பேனே.. விஷ்ணு புலம்பல்..!

பிக் பாஸ் வீட்டிற்கு 'சின்ன மருமகள்' சீரியலின் ஹீரோ மற்றும் ஹீரோயின் வந்த நிலையில் அவர்கள் சொன்னதை கேட்டு 'இன்னிக்கு வந்தவர்கள் நேற்று வந்திருந்தால் நான் பணப்பெட்டியை எடுத்து கிளம்பி இருப்பேனே

பணப்பெட்டியை எடுத்த பூர்ணிமா.. கலாய்த்து பிரதீப் அந்தோணி போட்ட பதிவு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான பூர்ணிமா 16 லட்சம் பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறிய நிலையில் அவருடைய முடிவு புத்திசாலித்தனமானது என்று பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இன்று முதல் 50 பேருக்கு மதிய உணவு வழங்க போகிறேன்.. விஜயகாந்த் நினைவிடத்தில் விஜய் டிவி பிரபலம் பேட்டி..!

 விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த விஜய் டிவி பிரபலம் இன்று முதல் எனது கேகே நகர் அலுவலகத்தில் 50 பேருக்கு மதிய உணவு வழங்கப் போகிறேன் என்று தெரிவித்துள்ளார்.