close
Choose your channels

இன்னொரு வாட்டி என்னை ஏலியன்னு சொன்னே, மனுஷனா மாறிடுவேன்: 'அயலான்' டிரைலர்..!

Friday, January 5, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடித்த ‘அயலான்’ திரைப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. 2 நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ட்ரைலரில் உள்ள அசத்தலான காட்சிகள் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழில் இதுவரை ரசிகர்கள் பார்த்திராத ஒரு வித்தியாசமான ஏலியன் படமாக இந்த படம் இருக்கும் என்பது ஆரம்ப காட்சியில் இருந்தே தெரிய வருகிறது. இயற்கையையும் பூமியையும் சிதைக்கும் சுயநலவாதிகளை மனிதர்கள் தட்டிக்கேட்க வில்லை என்றால், இயற்கையையும், மனிதர்களையும் காக்க வேறு உலகில் இருந்து ஏலியன்களும் வருவார்கள் என்பதே இந்த படத்தின் ஒன்லைன் கதை.

இயற்கையை அழிக்க முற்படும் ஒரு கும்பலை தடுப்பதற்காக விண்ணுலகில் இருந்து வரும் ஏலியன், சிவகார்த்திகேயனுடன் இணைந்து செய்யும் சாகச நிகழ்வுகள் தான் இந்த படத்தின் முக்கிய அம்சம். இந்த படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்பது ஒவ்வொரு காட்சியிலும் பார்க்க முடிகிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை மற்றும் பாடல்கள், சிவகார்த்திகேயன் ரகுல் பிரீத்தி சிங்கின் நடிப்பு, ரவிக்குமாரின் இயக்கம், ஏலியனை உருவாக்கிய தொழில்நுட்ப கலைஞர்களின் பணி என அனைத்து அம்சங்களும் பாசிட்டிவாக உள்ளதை அடுத்து இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும், தமிழில் மட்டுமின்றி அகில இந்திய அளவிலும் சர்வதேச அளவிலும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.