'நீ கொஞ்சாமலே நெஞ்சுக்குள்ள பெயினு பெயினு: 'பிரின்ஸ்' சிங்கிள் பாடல் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Friday,October 14 2022]

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படம் ரிலீசுக்கு முன்பே மிகப்பெரிய வியாபாரம் செய்து விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள நிலையில் ‘பிரின்ஸ்’ திரைப்படமும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீசாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ‘பிரின்ஸ்’ படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் அந்த பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல இசையமைப்பாளர் தமன் கம்போஸ் செய்த இந்த பாடலை எழுதி பாடியுள்ளார் பிரபல பாடகர் அறிவு என்பது குறிப்பிடத்தக்கது. முதல்முறை கேட்கும்போதே ஆட்டம் போட வைக்கும் அளவுக்கு இருக்கும் இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக மரியா நடித்துள்ள இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பதும் இந்த படத்தை அனுதீப் இயக்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

சத்யாவை கொன்றவனை ரயிலில் தள்ளிவிட்டு கொல்லுங்கள்: பிரபல நடிகர் டுவிட்!

சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி சத்யாவை ரயிலில் தள்ளிவிட்டு கல்லூரி மாணவன் சதீஷ் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் சத்யாவை கொலை செய்தது போலவே சதீஷை

பிக்பாஸ் சீசன் 6-ன் காதல் ஜோடி இவர்கள் தானா? பொறுத்திருந்து பார்ப்போம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி வரும் நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியிலும் ஒரு காதல் ஜோடி உருவாகி விட்டதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்

செம லுங்கி டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்.. எந்த படத்தின் பாடலுக்கு தெரியுமா?

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம லுங்கி டான்ஸ் ஆடிய வீடியோவை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த வீடியோவுக்கு

வெங்கட்பிரபுவின் அடுத்த படத்தில் இணைந்த 4 பிரபல நட்சத்திரங்கள்!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபுவின் அடுத்த படத்தில் நான்கு பிரபல நட்சத்திரங்கள் இணைந்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வடிவேலு சொன்னது கரெக்டா இருக்கு.. பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்து

 வானத்தை பார்த்து மல்லாக்கப் படுக்கிறது எவ்வளவு சுகம்ன்னு வடிவேலு சொன்னது கரெக்டா இருக்கு என ஜிபி முத்து மல்லாக்க படுத்தவாறு பேசும் வசனம் உள்ள பிக்பாஸ் புரமோ வீடியோ சற்று முன்