close
Choose your channels

செம லுங்கி டான்ஸ் ஆடிய கீர்த்தி சுரேஷ்.. எந்த படத்தின் பாடலுக்கு தெரியுமா?

Friday, October 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம லுங்கி டான்ஸ் ஆடிய வீடியோவை பதிவு செய்திருக்கும் நிலையில் அந்த வீடியோவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

சமூகவலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி சுரேஷ்க்கு சுமார் 17 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் அவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் நானியுடன் கீர்த்தி சுரேஷ் நடித்த ‘தசரா’ என்ற திரைப்படம் கடந்த அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சிங்கிள் பாடல் ஒன்று சமீபத்தில் வெளியானது.

‘தூம் தாம்’ என்று தொடங்கும் இந்த பாடல் மிகப் பெரிய அளவில் வைரலாகி இருக்கும் நிலையில் இந்த பாடலுக்கு தனது தோழியுடன் செம லுங்கி டான்ஸ் ஆடிய வீடியோவை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, மீராஜாஸ்மின், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்த திரைப்படத்தை ஸ்ரீகாந்த் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் இந்த படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தமிழ் தெலுங்கு மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது உதயநிதியுடன் ‘மாமன்னன்’, சிரஞ்சீவியுடன் ‘போலோ சங்கர்’, உள்பட நான்கு படங்களில் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.