close
Choose your channels

'லியோ' படக்குழுவினர்களிடம் ஆலோசனை கேட்ட சிவகார்த்திகேயன் படக்குழு: எதற்கு தெரியுமா?

Friday, March 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் 21 வது படத்தின் படக்குழுவினர் ’லியோ’ படக்குழுவினர்களிடம் சில முக்கிய ஆலோசனைகளை கேட்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன

சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க இருக்கும் திரைப்படம் தான் ’எஸ்கே 21’. இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதாகவும் விரைவில் சிவகார்த்திகேயன் உள்பட படக்குழுவினர் காஷ்மீர் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ’லியோ’ படக்குழுவினர்களிடம் ’எஸ்கே 21’ படக்குழுவினர் காஷ்மீரில் உள்ள அழகிய லொகேஷன்கள் மற்றும் வெப்பநிலை குறித்து ஆலோசனை கேட்க இருப்பதாக கூறப்படுகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ’லியோ’ படப்பிடிப்பில் கலந்து கொண்ட சிலர் ‘எஸ்கே21’ படக்குழுவினர்களுக்கு சில நல்ல ஆலோசனைகளை கூறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் காஷ்மீரில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்ஷன் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment