சிவகார்த்திகேயன் படத்தை இயக்க போகிறேனா? கே.வி.ஆனந்த் விளக்கம்!

கோ, அயன் உள்பட ஒருசில சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த், தற்போது அடுத்த படத்திற்காக தயாராகி வருவதாக செய்திகள் வெளிவந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை கேவி ஆனந்த் இயக்கிவிருப்பதாகவும், இந்தப் படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த கேவி ஆனந்த் தனது அடுத்த படத்தின் ஹீரோ யார் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், தற்போது மாபியா சம்பந்தப்பட்ட கதை ஒன்றின் திரைக்கதையை எழுதி வருவதாகவும், அந்த கதையை எழுதி முடித்தவுடன் தான் ஹீரோ யார் என்பதை முடிவு செய்வேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த படம் தமிழில் சூப்பர் ஹிட்டான ’நாயகன்’ படம் போன்று மும்பையை சேர்ந்த மாபியா குழு ஒன்றின் சம்பவங்கள் குறித்த கதை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மாபியாவுக்கும் ரவுடிகளுக்கும் பெரும் வித்தியாசம் உண்டு என்றும் அதை தெளிவாக கூறும் படம் தான் இது என்றும் கூறிய கேவி ஆனந்த் இந்த படத்தில் அரசியல் இருந்தாலும் முழுக்க முழுக்க அரசியல் சம்பந்தப்பட்ட கதை அல்ல என்றும் இது ஒரு கமர்சியல் மற்றும் லவ் டிராக் உள்ள படம் என்றும் கூறியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

'அண்ணாத்த' ரஜினியை சந்தித்த லெஜண்ட் சரவணன்! வைரல் புகைப்படம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக சென்னை கோகுலம் ஸ்டுடியோவில் நடைபெற்று வருவதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்

ஆயிரம் விளக்கு தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நடிகை குஷ்பு!

பாஜக வேட்பாளராக ஆயிரம் விளக்கு தொகுதியில் களம் காணும் நடிகை குஷ்பு தற்போது தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட...! கலாய்த்து தள்ளிய விந்தியா...! அதிரும் மதுரை...!

"ராகுலுக்கு பிரதமர் கனவு, உதயநிதிக்கு முதல்வர் கனவு"- இதற்கு இவங்க சரிப்பட்டு வரமாட்டாங்க என அதிமுக நட்சத்திர பேச்சாளர் நடிகை விந்தியா பிரச்சாரத்தில்  கூறியுள்ளார். 

2021 தமிழக சட்டமன்றதேர்தலில் களமிறங்கிய அரசியில் வாரிசுகள்...! 

வாரிசு அரசியல் என்பது வாழையடிவாழையாக  நடந்துவருவது  நமக்கு தெரிந்த ஒன்னுதான். 

கடைசி நேரத்தில் காலை வாரிய சமக வேட்பாளர்..! அதிர்ந்து போன சரத்...!

சமத்துவ மக்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும்  வேட்பாளர் ஒருவர், நேற்று வேட்புமனுவை வாபஸ் வாங்கியுள்ளார்.