சிவகார்த்திகேயனின் 'ரெமோ'வுக்கு நாளை முக்கிய நாள்

  • IndiaGlitz, [Sunday,September 25 2016]

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள 'ரெமோ' திரைப்படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில் இந்த படம் நாளை சென்சார் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.
சென்சார் சர்டிபிகேட் கிடைத்ததும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் அனைத்துமே 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ளதால் இந்த படத்திற்கும் 'யூ' சர்டிபிகேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

More News

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அஜித் நடித்த 'தீனா' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இன்று இந்தியாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வரும் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்கள் இன்று தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு எங்களது மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

'AAA'படத்தில் சிம்புவின் ஆச்சரியமான 2வது கேரக்டர்

சிம்பு நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வரும் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து...

தனுஷின் 'பவர்பாண்டி'யில் இணையும் மேலும் ஒரு பிரபல நடிகர்

தனுஷ் முதன்முதலாக இயக்கும் 'பவர் பாண்டி' படத்தில் முக்கிய வேடத்தில் ராஜ்கிரண், பிரசன்னா, சாயாசிங், ரோபோ சங்கர், ஆகியோர் நடித்து வருவது தெரிந்ததே...

முதல்வருக்கு வாழ்த்து சொன்ன ரஜினியின் குடும்பம்

தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் குணமாகிவிட்டதாகவும்

'காக்க காக்க 2' எப்போது? வெளிவராத தகவல்

சூர்யா, ஜோதிகா நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2003ஆம் ஆண்டு வெளிவந்த போலீஸ் த்ரில்லர் படம் 'காக்க காக்க'...