close
Choose your channels

சிவகார்த்திகேயனின் 'ரெமோ'வுக்கு நாளை முக்கிய நாள்

Sunday, September 25, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள 'ரெமோ' திரைப்படம் வரும் அக்டோபர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ளது.
இந்நிலையில் இந்த படம் நாளை சென்சார் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. இந்த தகவலை இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.
சென்சார் சர்டிபிகேட் கிடைத்ததும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும். சிவகார்த்திகேயனின் முந்தைய படங்கள் அனைத்துமே 'யூ' சர்டிபிகேட் பெற்றுள்ளதால் இந்த படத்திற்கும் 'யூ' சர்டிபிகேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.