அருண்ராஜா காமராஜா மனைவிக்கு கன்ணீர் அஞ்சலி செலுத்திய சிவகார்த்திகேயன்!

  • IndiaGlitz, [Monday,May 17 2021]

கொரோனா வைரஸ் என்ற கொடிய அரக்கனுக்கு திரையுலக பிரபலங்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் நிலையில் இன்று காலை பேரிடியாக பிரபல இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவர்களின் மனைவி சிந்துஜா அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு அருண்ராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவரால் தனது மனைவிக்கு இறுதி அஞ்சலி கூட செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் அருண்ராஜா காமராஜரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன், அருண்ராஜாவின் மனைவி சிந்துஜாவுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். இது குறித்த புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அருண்ராஜா காமராஜரின் சகோதரரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கொரோனா நிவாரண நிதி: சன் டிவி குழுமம் கொடுத்த தொகை!

தமிழக அரசின் கொரோனா நிவாரண பணிக்காக லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் தொழிலதிபர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் நிதி உதவி செய்து வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்

எனக்கே உங்களை பிடிக்கும்ன்னா பாத்துக்கோங்களேன்: ப்ரியா பவானிசங்கர் குறிப்பிட்டது யாரை?

சின்னத்திரை சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த பிரியா பவானிசங்கர் 'மேயாதமான்' என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன்பின்னர் கடைக்குட்டிசிங்கம், மான்ஸ்டர், மாபியா, உள்ளிட்ட பல

முதல்வரை நேரில் சந்தித்து நிதி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள தமிழக அரசுக்கு தமிழக மக்கள். தொழிலதிபர்கள்

பயணம் செய்பவர்களுக்கு இன்று முதல் இ- பதிவு அவசியம் - எப்படி விண்ணப்பிப்பது...?

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் பயணிக்க இ-பதிவு முறை இன்றுமுதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

ரெம்டெசிவர்  விற்பனைக்கு  புதிய 'போர்ட்டல்'.....! அதிரடி  காட்டும் அரசு...!

ரெம்டெசிவர் மருந்திற்கு தட்டுப்பாடு இருப்பதால், தனியார் மருத்துவமனைகளுக்கு  நேரடியாக விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.