சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்துடன் கனெக்சன் ஆன 'இந்தியா-பாகிஸ்தான்'!

  • IndiaGlitz, [Thursday,September 08 2022]

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் சமீபத்தில் வெளியான இந்த படத்தின் சிங்கிள் பாடல் மிகப் பெரிய அளவில் வைரலானது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியுள்ள நிலையில் இந்த படத்தின் தமிழ் வசனங்களை எழுத தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் ஆண்டனி நடித்த ’இந்தியா பாகிஸ்தான்’ என்ற படத்தை இயக்கிய ஆனந்த் என்பவர் தான் ‘பிரின்ஸ்’ படத்தின் தமிழ் வசனங்களை எழுதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ’இந்தியா-பாகிஸ்தான்’ திரைப்படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை விழுந்து விழுந்து சிரிக்கும் காமெடி வசனங்களை எழுதிய ஆனந்த், ‘பிரின்ஸ்’ படத்திலும் காமெடி வசனங்களை எழுதி ரசிகர்களின் பாராட்டுக்களை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார் என்பதும் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

தளபதி விஜய்யின் 'வாரிசு' படத்தின் மாஸ் தகவல்: ரசிகர்கள் உற்சாகம்!

 தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் மாஸ் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது ரசிகர்களுக்கு

வேற லெவல் டுவின் போஸ் பிகினி புகைப்படம்: கலக்கும் 'ஆம்பள' நடிகை!

விஷால் நடித்த 'ஆம்பள' உள்பட பல திரைப்படங்களில் நடித்த நடிகை தனது இன்ஸ்டாகிராமில் வேற லெவல் டுவின் போஸ் பிகினி புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் அந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது. 

ராஜ்கிரண் சம்மதம் இல்லாமலேயே மகள் திருமணமா? மாப்பிள்ளை இந்த சீரியல் நடிகரா?

பிரபல நடிகர் ராஜ்கிரணின் மகள் திருமணம் அவருடைய சம்மதம் இல்லாமலேயே நடந்து விட்டதாகவும் சன் டிவி சீரியல் பிரபலம் தான் ராஜ்கிரண் மகளை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

'நானே வருவேன்' படத்தின் 'வீரா சூரா' பாடல்: யுவனுடன் பாடிய சூப்பர் சிங்கர் பிரபலம்!

தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நானே வருவேன்' திரைப்படத்தில் இடம்பெற்ற  'வீரா சூரா' என்ற பாடல் சற்று முன் வெளியாகி உள்ள நிலையில் இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன்

விக்னேஷ் காந்த் திருமணத்தில் சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்: தாலி எடுத்து கொடுத்தது யார் தெரியுமா?

பிரபல யூடியூபர், நடிகர் மற்றும் பட்டிமன்ற பேச்சாளர் விக்னேஷ் காந்த் திருமணம் இன்று நடந்த நிலையில் இந்த திருமணத்தில் நேரில் கலந்துகொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிவகார்த்திகேயன்