close
Choose your channels

ராஜ்கிரண் சம்மதம் இல்லாமலேயே மகள் திருமணமா? மாப்பிள்ளை இந்த சீரியல் நடிகரா?

Wednesday, September 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் ராஜ்கிரணின் மகள் திருமணம் அவருடைய சம்மதம் இல்லாமலேயே நடந்து விட்டதாகவும் சன் டிவி சீரியல் பிரபலம் தான் ராஜ்கிரண் மகளை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

தமிழ் திரையுலகின் குணச்சித்திர நடிகர்களில் ஒருவரான ராஜ்கிரணின் மகள் ஜீனத், சன் டிவியில் ஒளிபரப்பான ’நாதஸ்வரம்’ என்ற சீரியலில் நடித்த முனீஸ்ராஜாவை காதத்ததாகவும் இருவரும் ராஜ்கிரண் குடும்பத்தின் சம்மதம் இல்லாமலேயே திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் முனிஷ்ராஜா தமிழ் குணசித்திர நடிகர் சண்முகராஜன் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முனிஷ்ராஜா-ஜீனத் திருமணத்தை முனிஷ்ராஜா குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் ராஜ்கிரண் குடும்பத்தில் ஒரு சிலர் இன்னும் இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் முனிஷ்ராஜா-ஜீனத் திருமணம் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும் கோவிலில் வைத்து இந்த திருமணம் எளிமையாக நடைபெற்றது என்று கூறப்படுவது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.