சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' சாட்டிலைட், டிஜிட்டல் இத்தனை கோடியா? பட்ஜெட்டை விட அதிகமா இருக்கே!

  • IndiaGlitz, [Friday,September 16 2022]

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் சாட்டிலைட் மற்றும் வியாபாரம் குறித்த தகவல் வெளியாகி பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்த ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி உள்ளது என்பதும் அனுதீப் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள இந்த படம் வரும் அக்டோபர் 21ஆம் தேதி வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் ஒருபக்கம் நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமையை டிஸ்னி ஹாட்ச்டார் மற்றும் விஜய் டிவி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த இரண்டும் சேர்ந்து 42 கோடி ரூபாய்க்கு விலை போயுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘பிரின்ஸ்’ படத்தின் மொத்த பட்ஜெட்டே 30 முதல் 40 கோடி என்று கூறப்படும் நிலையில் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை வியாபாரம் மட்டுமே பட்ஜெட்டைவிட அதிகமாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதை அடுத்தே ‘பிரின்ஸ்’ படத்தின் வியாபாரம் உச்சத்திற்கு சென்று உள்ளதாக கூறப்படுகிறது.

More News

தனுஷின் அடுத்த படத்தில் இணையும் லோகேஷ் கனகராஜ் ஹீரோ!

தனுஷின் அடுத்த திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் பட ஹீரோ இணைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

 சிம்புவின் 'வெந்து தணிந்தது காடு' நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

வந்தியத் தேவனின் கேரக்டருக்கே பிறந்தவர் கார்த்தி: "பொன்னியின் செல்வன்" ஜெயம் ரவி..

பொன்னியின் செல்வன்' என்ற டைட்டில் கேரக்டரில் நடித்த நடிகர் ஜெயம் ரவி, தனது கேரக்டர் குறித்தும், மணிரத்னம் இந்த படத்திற்காக உழைத்தது குறித்தும், வந்தியத்தேவன், கரிகால் சோழன் கேரக்டர்களில்

தேவதர்ஷினியின் மகளா இவர்?  ஆச்சரியத்தில் வாயைப்பிளக்கும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவின் நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகையான தேவதர்ஷினி மகள் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகும் நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து

சுந்தர் சியின் அடுத்த படத்திற்காக பாடல் பாடிய ஆண்ட்ரியா: வீடியோ செம வைரல்

சுந்தர் சி யின் அடுத்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடிய நிலையில் இந்த பாடலின் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.