close
Choose your channels

சுந்தர் சியின் அடுத்த படத்திற்காக பாடல் பாடிய ஆண்ட்ரியா: வீடியோ செம வைரல்

Friday, September 16, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சுந்தர் சி யின் அடுத்த படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடிய நிலையில் இந்த பாடலின் வீடியோ வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சுந்தர்சி நடிப்பில் உருவாகிய திரைப்படம் ’வல்லான்’. இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’ஜில்லு ஜக்கம்மா’ என்ற பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடியுள்ளார். இந்த பாடலின் லிரிக் வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஆண்ட்ரியாமற்றும் ஸ்ரீநிஷா ஜெயசீலன் பாடிய இந்த பாடலை சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். சுந்தர் சி, தன்யா ஹோப், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாச்சலம், ஹெபா பட்டேல் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை மணி செய்யோன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே சிபிராஜ் நடித்த ‘கட்டப்பாவ காணோம்’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மணி பெருமாள் ஒளிப்பதிவில் தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பில் உருவாகிய இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.