ரெமோ' டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் புதிய அப்டேட்

  • IndiaGlitz, [Sunday,September 18 2016]

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரெமோ' படத்தின் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் இரவுபகலாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வியாபாரம் கிட்டத்தட்ட நிறைவடையும் நிலையில் உள்ளது. ஏற்கனவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளின் ரிலீஸ் உரிமையும் எம்ஜி முறையில் விற்பனையாகிவிட்ட இந்த படத்தின் வட இந்திய ரிலீஸ் உரிமையை தற்போது ரிலையன்ஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இதனால் இந்த படம் வட இந்தியாவில் நல்ல முறையில் புரமோஷன் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த 'ரெமோ' படத்தின் டிரைலர் நாளை மாலை 6.00 மணிக்கு வெளியாகிறது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது வெளிவரும் டிரைலரும் ரசிகர்கள் மத்தியில் பட்டையை கிளப்பும் என்று கூறப்படுகிறது.
அக்டோபர் 7ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறை தினத்தில் வெளியாகவுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ், சதீஷ், கே.எஸ்.ரவிகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்துள்ள இந்த படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை 24ஏஎம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

More News

'கபாலி'யுடன் கனெக்சன் ஆன 'கடவுள் இருக்கான் குமாரு'

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கபாலி' உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி ரூ.500 கோடிக்கும் மேல் வசூலாகி இந்திய திரையுலகையே ஆச்சரியப்படுத்தியது.

சமந்தா படங்களில் நடிப்பதை குறைத்தது ஏன்?

இந்த ஆண்டு சமந்தா நடித்த ஐந்து படங்கள் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆனது. அவற்றில் 'தெறி' மற்றும் '24' ஆகிய தமிழ் படங்களும் அடங்கும்.

விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் தீபாவளி விருந்து

இளையதளபதி விஜய் நடிப்பில் பரதன் இயக்கி வரும் 'பைரவா' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.

ஜப்பானில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கிடைத்த தமிழ் வரவேற்பு

ஆஸ்கார் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை பெற்று பாரத நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு சமீபத்தில் ஜப்பான் நாட்டின் யோகோபோடியா என்ற அமைப்பு வழங்கும் ஃபுகுவோகா விருது அறிவிக்கப்பட்டது.

திருமணம் குறித்து நடிகை சாட்னா டைடஸ் விளக்கம்

விஜய் ஆண்டனி நடித்த வெற்றி படமான 'பிச்சைக்காரன்' படத்தில் நாயகியாக நடித்த நடிகை சாட்னா டைடஸ் கடந்த வாரம் பிரபல விநியோகிஸ்தர் கார்த்திக்கை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.