சிம்புதேவனின் அடுத்த படத்தில் ஆறு ஹீரோக்கள்

  • IndiaGlitz, [Wednesday,October 17 2018]

விஜய் நடித்த 'புலி' படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன் அடுத்ததாக வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படத்தை இயக்கி வந்தார். ஆனால் இந்த படம் தயாரிப்பாளர் ஷங்கருக்கும், நடிகர் வடிவேலுக்கும் இடையிலான பிரச்சனையால் பாதியில் நிற்கின்றது

இந்த நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிக்கும் படம் ஒன்றை இயக்குனர் சிம்புதேவன் இயக்க ஆரம்பகட்ட பணிகளை செய்து வருகிறார். இந்த படத்தில் வெங்கட்பிரபுவின் ஆஸ்தான் நடிகர்களான ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி மற்றும் விஜயலட்சுமி நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக சமீபத்தில் விஜயலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் சிம்புதேவன் இயக்கவுள்ள இந்த படத்தில் ஆறு ஹீரோக்கள் நடிக்கவுள்ளதாகவும், ஆறு ஹீரோக்களுடன் ஆறு கதைகளை கொண்ட ஒரு படம் என்றும் கூறப்படுகிறது. ஆறு ஹீரோக்களின் பெயர்கள் மற்றும் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

More News

மூடிட்டு போ! டுவிட்டர் பயனாளியை திட்டிய சின்மயி

கடந்த சில நாட்களாக வைரமுத்து மீது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டு குறித்து ஆதரித்தும், எதிர்ப்பு தெரிவித்தும் சமூக வலைத்தளமான டுவிட்டரில் விவாதம் நடந்து வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானுடன் மீண்டும் இணையும் சிம்புவின் மேஜிக் கூட்டணி

சிம்பு நடிப்பில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'விண்ணை தாண்டி வருவாயோ' திரைப்படம் காதலர்களுக்கு ஒரு மறக்க முடியாத படம்.

'சீதக்காதி' சென்சார் தகவல்கள் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் வசூல் மழையை பொழிந்து வரும் நிலையில்

கெட்டப்பை மாற்றிய அஜித்! விஸ்வாசம் படத்தில் 3 வேடமா?

அஜித் நடித்து வரும் 'விஸ்வாசம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் இந்த படத்தில் அஜித் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே.

வைரமுத்து மீது மலேசியா வாசுதேவன் மருமகள் கூறிய 'மீடூ' புகார்

பாடலாசிரியர் வைரமுத்து மீது பாடகி சின்மயி கூறிய பாலியல் புகாரை அடுத்து வேறு சில பெண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து தைரியமாக கூறி வருகின்றனர்.