close
Choose your channels

சிம்புதேவனின் அடுத்த படத்தில் ஆறு ஹீரோக்கள்

Wednesday, October 17, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் நடித்த 'புலி' படத்தை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன் அடுத்ததாக வடிவேலு நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி 2' படத்தை இயக்கி வந்தார். ஆனால் இந்த படம் தயாரிப்பாளர் ஷங்கருக்கும், நடிகர் வடிவேலுக்கும் இடையிலான பிரச்சனையால் பாதியில் நிற்கின்றது

இந்த நிலையில் தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு தயாரிக்கும் படம் ஒன்றை இயக்குனர் சிம்புதேவன் இயக்க ஆரம்பகட்ட பணிகளை செய்து வருகிறார். இந்த படத்தில் வெங்கட்பிரபுவின் ஆஸ்தான் நடிகர்களான ஜெய், சிவா, வைபவ், பிரேம்ஜி மற்றும் விஜயலட்சுமி நடிக்கவுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதாக சமீபத்தில் விஜயலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார்

இந்த நிலையில் சிம்புதேவன் இயக்கவுள்ள இந்த படத்தில் ஆறு ஹீரோக்கள் நடிக்கவுள்ளதாகவும், ஆறு ஹீரோக்களுடன் ஆறு கதைகளை கொண்ட ஒரு படம் என்றும் கூறப்படுகிறது. ஆறு ஹீரோக்களின் பெயர்கள் மற்றும் இந்த படத்தின் டைட்டில் அறிவிப்பு மிக விரைவில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.