கொரோனா மரணத்திற்கு முன் 6 குழந்தைகளுடன் வாக்கி-டாக்கியில் பேசிய தாய்!

கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பலியாகி வரும் நிலையில் அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் 6 குழந்தைகளுக்கு தாயான பெண் ஒருவர், தான் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் தனது குழந்தைகளுடன் வாக்கி டாக்கியில் பேசிய நெகிழ்ச்சியான சம்பவம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது

வாஷிங்டன் நகரை சேர்ந்த சண்டி என்ற பெண்ணின் கணவர் கடந்த 2012 ஆம் ஆண்டு திடீரென மரணம் அடைந்து விட்டதை அடுத்து 13 முதல் 24 வயது உள்ள ஆறு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பை தலையில் சுமந்து, கடுமையாக உழைத்து தனது குழந்தைகளை காப்பாற்றி வந்தார்

இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அவருக்கு திடீரென மார்பகப் புற்றுநோய் ஏற்பட்டது. அந்த மார்பக புற்றுநோய்க்கு அறுவைசிகிச்சை செய்து கொண்டு பிழைத்த அவர் மார்ச் 3ஆம் தேதி திடீரென கொரோனா வைரஸால் தாக்கப்பட்டதை அடுத்து அவர் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்

அவரது உடல்நிலை மேலும் மோசமான நிலையில் அவர் தனது குழந்தைகளுடன் கடைசியாக பேச ஆசைப்பட்டார். ஆனால் அவர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வந்ததாலும், அவரது குழந்தைகளும் தனித்தனி வார்டுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்ததாலும் அவரால் குழந்தைகளுடன் நேரில் பேச முடியவில்லை. இதனை அடுத்து அவர் தலையணை அருகெ வைத்திருந்த வாக்கி டாக்கி மூலம் தனது ஆறு குழந்தைகளுடன் கடைசி நேரத்தில் நெகழ்ச்சியுடன் பேசி அனைவருக்கும் தனது அன்பை வெளிப்படுத்தி உள்ளார். தனது ஆறு குழந்தைகளுடன் பேசிய அடுத்த சில மணி நேரத்தில் அவர் மரணம் அடைந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியான சம்பவம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது
 

More News

போனை வைத்துக்கொண்டு சும்மா இருங்க… மக்களே!!! அலறும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக உலகமே வீடுகளில் முடங்கி கிடக்கிறது

டாடாவை அடுத்து முகேஷ் அம்பானியின் நிதியுதவி குறித்த அறிவிப்பு

உலகம் முழுவதும் மனித குலத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக இந்தியாவையும் ஆட்டுவித்து வருவது தெரிந்ததே

ஊரடங்கால் பாதித்த மக்களுக்கு ரூ.1.25 கோடி செலவு செய்த சானியா மிர்சா

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரஸ் தடுப்பு நிதியாக கோடிக்கணக்கான ரூபாய்களை தொழிலதிபர்களும்,

டாஸ்மாக் கடையின் பூட்டு உடைப்பு: லட்சக்கணக்கான மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை

திருச்சி அருகேயுள்ள உறையூரில் டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

டெல்லி கூட்டத்தில் பங்கேற்ற 1500 தமிழர்களில் 16 பேர்களுக்கு கொரோனா: மீதமுள்ளவர்களுக்கு?

டெல்லியில் சமீபத்தில் தனியார் அமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.