close
Choose your channels

விஜய் சேதுபதி படம் உள்பட 6 படங்கள், 2 வெப் சீரிஸ்.. ஓடிடி ரசிகர்களுக்கு இந்த வாரம் கொண்டாட்டம்..!

Thursday, March 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஒவ்வொரு வாரமும் ஓடிடியில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் தகவல் குறித்து பார்த்து வரும் நிலையில் இந்த வாரம் விஜய்சேதுபதி நடித்த ’மெர்ரி கிறிஸ்துமஸ்’ உள்பட 6 திரைப்படங்கள் மற்றும் 3 வெப் சீரிஸ்கள் வெளியாக இருப்பதை எடுத்து ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில் வெளியான விஜய் சேதுபதி, காத்ரீனா கைப் நடித்த ‘மெர்ரி கிறிஸ்துமஸ்’ திரைப்படம் இந்த வாரம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது. அதேபோல் சந்தானம் நடித்த ’வடக்குப்பட்டி இராமசாமி’ என்ற திரைப்படம் இந்த வாரம் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாக உள்ளது

மேலும் ‘எனக்கு எண்டே கிடையாது’ என்ற படம் ஆகா ஓடிடியில், ‘நந்திவர்மன்’ என்ற படம் டென்டுகொட்டா ஓடிடியில் வெளியாகவுள்ளது. மேலும் யோகி பாபு நடித்த ’தூக்குத் துரை’ என்ற திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது என்பதும் அதேபோல் ’டெவில்’ என்ற திரைப்படம் டென்ட் கொட்டா ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



அது மட்டும் இன்றி ’ஹார்ட் பீட்’ என்ற வெப் சீரிஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில், ‘சுழியம்’ என்ற சீரியல் ஜியோ சினிமாவில் வெளியாகவுள்ளது.

மேலும் ’ப்ரீத்’ என்ற தெலுங்கு படம் ஆகா ஓடிடியில், ‘வளரி’ என்ற தெலுங்கு படம் ஈடிவி வின் ஓடிடியில், ‘யாத்ரா 2’ என்ற தெலுங்கு படம் அமேசான் பிரைம் ஓடிடியில், ’சவுண்ட் பார்ட்டி’ என்ற தெலுங்கு படம் ஆகா ஓடிடியில் வெளியாகவுள்ளது.

மேலும் ‘ராணி’ என்ற மலையாளப் படம் மனோரமா மேக்ஸ் ஓடிடியில், ‘அன்வெஷிப்பின் கண்டேதும்’ என்ற மலையாள திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.