'உண்மை நடக்கும்.. பொய் பறக்கும்.. எஸ்.ஜே.சூர்யாவின் 'வதந்தி' டிரைலர்

  • IndiaGlitz, [Tuesday,November 22 2022]

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யா நடித்த முதல் நேரடி ஓடிடி திரைப்படமான ’வதந்தி’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் அடர்ந்த காட்டில் மரணமடைந்த நிலையில் அவரது மரணம் குறித்து விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரி எஸ்.ஜே.சூர்யா சந்திக்கும் சவால்கள் மற்றும் திரில்லான காட்சிகள் தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா, சஞ்சனா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். விக்ரம் வேதா இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் உருவாகிய இந்த படம் டிசம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் மேல் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சைமன் கிங் இசையமைத்த இந்த படம் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவில், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

More News

'துணிவு' படத்திற்கு 800 திரையரங்குகள் ஒதுக்கப்பட்டதா? அப்போ 'வாரிசு' நிலைமை?

தமிழகத்தில் சுமார் 1100 திரையரங்குகளில் மட்டுமே இருக்கும் நிலையில் அதில் 800 திரையரங்குகளில் 'துணிவு' படத்திற்காக ஏற்கனவே ஒதுக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ள

'கைதி 2' படத்தில் வில்லனாகும் பிரபல ஹீரோ? லோகேஷின் வேற லெவல் திட்டம்!

லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே ஹீரோவுக்கு இணையாக வில்லன் கேரக்டர் இருக்கும் என்பதும் அவரது 'மாஸ்டர்' 'விக்ரம்' ஆகிய படங்களில் இருந்து தெரிய வந்தது.

அஜித்தின் 'துணிவு' படத்தில் இதுதான் ஹைலைட்.. கசிந்த ஆச்சரியமான தகவல்!

அஜித் நடிப்பில், ஹெச் வினோத் இயக்கத்தில், ஜிப்ரான் இசையில், போனிகபூர் தயாரிப்பில் உருவாகிய 'துணிவு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 

பொங்கல் ரிலீஸ் படத்தின் ஹீரோவுக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி.. நன்றி தெரிவித்த நடிகர்!

வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகும் படத்தின் ஹீரோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறிய நிலையில் அவருடைய வாழ்த்த்க்கு தனது நன்றியை அந்த நடிகர் தெரிவித்துள்ளார். 

டிசம்பர் 4ல் 'வாரிசு' செகண்ட் சிங்கிள்? அன்று என்ன விசேஷம் தெரியுமா

தளபதி விஜய் நடித்துள்ள 'வாரிசு' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.