close
Choose your channels

'உண்மை நடக்கும்.. பொய் பறக்கும்.. எஸ்.ஜே.சூர்யாவின் 'வதந்தி' டிரைலர்

Tuesday, November 22, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யா நடித்த முதல் நேரடி ஓடிடி திரைப்படமான ’வதந்தி’ படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் அடர்ந்த காட்டில் மரணமடைந்த நிலையில் அவரது மரணம் குறித்து விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரி எஸ்.ஜே.சூர்யா சந்திக்கும் சவால்கள் மற்றும் திரில்லான காட்சிகள் தான் இந்த படத்தின் கதை என்பது குறிப்பிடத்தக்கது

சூர்யா, சஞ்சனா, லைலா, நாசர், விவேக் பிரசன்னா, ஸ்மிருதி வெங்கட் உள்பட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தை ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கி உள்ளார். விக்ரம் வேதா இயக்குநர்கள் புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் உருவாகிய இந்த படம் டிசம்பர் 2ஆம் தேதி அமேசான் பிரைம் மேல் நேரடியாக ஒளிபரப்பாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சைமன் கிங் இசையமைத்த இந்த படம் சரவணன் ராமசாமி ஒளிப்பதிவில், ரிச்சர்ட் கெவின் படத்தொகுப்பில் உருவாகியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment