பா.ரஞ்சித்தின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா!

  • IndiaGlitz, [Tuesday,May 14 2019]

எஸ்.ஜே.சூர்யா நடித்த 'மான்ஸ்டர்' திரைப்படம் வரும் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. மேலும் அவர் அமிதாப்பச்சனுடன் நடித்து வரும் 'உயர்ந்த மனிதன்' திரைப்படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 'கபாலி, 'காலா' இயக்குனர் ரஞ்சித்தின் அடுத்த படத்தில் நடிக்க எஸ்.ஜே.சூர்யா ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது

ஆம், ரஞ்சித்தின் நீலம் புரடொக்சன்ஸ் தயாரிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ரஞ்சித்தின் உதவியாளர் ஒருவர் இயக்கவிருப்பதாகவும் தெரிகிறது. இந்த படம் குறித்த முழு விபரங்கள் விரைவில் வெளிவரவுள்ளது.

ரஞ்சித்தின் தயாரிப்பில் ஏற்கனவே 'பரியேறும் பெருமாள்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் அவர் தற்போது 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு' என்ற படத்தை தயாரித்துள்ளார் என்பதும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

என்னை பதவியில் இருந்து நீக்க சொல்ல கமல்ஹாசன் யார்? அமைச்சர் ஆவேசம்

கமல்ஹாசன் சமீபத்தில் 'இந்து தீவிரவாதி' குறித்து பேசியது கடும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

3வது படத்திலேயே உச்சத்தை தொடும் இயக்குனர்கள்!

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு இயக்குனர் பத்து அல்லது பதினைந்து படங்கள் இயக்கிய பின்னரே பெரிய நடிகர்கள் பக்கமே அவர்கள் நெருங்க முடியும்.

'நாக்கை அறுக்க வேண்டும்' என்று பேசிய அமைச்சர் குறித்து மக்கள் நீதிமன்றம் அறிக்கை!

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் நாதுராம் கோட்சே என்று சமீபத்தில் கமல் பேசியதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

'தளபதி 63' படத்தின் 'வெறி'த்தனமான டைட்டில் குறித்த தகவல்

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்புடன் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

கமல் வீட்டின் முன் குவிந்த போலீஸ்: ஆழ்வார்ப்பேட்டையில் பரபரப்பு!

நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் சமீபத்தில் இந்து தீவிரவாதி குறித்து பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்கு ஒருபுறம் கண்டனங்களும் இன்னொரு புறம் ஆதரவும் குவிந்து வருகிறது.