அரவிந்தசாமி இடத்தை பிடித்தார் எஸ்.ஜே.சூர்யா

  • IndiaGlitz, [Friday,September 08 2017]

இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா தற்போது முழுநேர நடிகராக மாறிவிட்டார். குறிப்பாக விரைவில் வெளியாகவுள்ள மகேஷ்பாபு-ஏ.ஆர்.முருகதாஸின் 'ஸ்பைடர், விஜய்-அட்லியின் 'மெர்சல்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் அவருடைய மார்க்கெட்டை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ஜெயம்ரவி, அரவிந்தசாமி நடித்த 'போகன்' திரைப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இந்த படத்தில் ஜெயம் ரவி வேடத்தில் ரவிதேஜா நடிக்கவுள்ளார். அரவிந்தசாமி வேடத்தில் தெலுங்கிலும் அவரே நடிக்க வாய்ப்பு வந்தபோதும், அரவிந்தசாமி அதை மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அரவிந்தசாமியின் கேரக்டரில் நடிக்க படக்குழுவினர் எஸ்.ஜே.சூர்யாவிடம் அணுகியபோது அவர் பாசிட்டிவ் பதிலை அளித்ததாகவும், விரைவில் அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.

More News

அனிதா அஞ்சலி நிகழ்ச்சியில் அமீர்-ரஞ்சித் கருத்து மோதல்

அரியலூர் மாணவி அனிதாவுக்கு இயக்குனர் சங்கத்தின் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது...

பள்ளி செல்லும் மகளை புல்லட்டில் டிராப் செய்த ஜோதிகா

ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள 'மகளிர் மட்டும்' திரைப்படம் வரும் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில்...

நயன்தாராவின் 'அறம்' ரிலீஸ் தேதி அறிவிப்பு

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்து வந்த 'அறம்' ..

மணிரத்னம் படத்தில் ஜோதிகாவை தொடர்ந்து மேலும் ஒரு பிரபல நாயகி

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய்சேதுபதி, துல்கர் சல்மான் உள்பட நான்கு ஹீரோக்கள் நடிக்கவுள்ளனர்...

விஜய்யால் ஏற்பட்ட போலீஸ் கனவு: ஒருநாள் அதிகாரியான மனவளர்ச்சி குன்றிய இளைஞர்

21 வயது ஸ்டீபன் என்ற இளைஞர் மனவளர்ச்சி குன்றிய நிலையில் தளபதி விஜய் மற்றும் சுரேஷ்கோபி படங்கள் பார்த்ததின் விளைவால் தானும் ஒருநாள் போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்று கனவு கண்டார்...