close
Choose your channels

சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச்' சென்சார் தகவல் மற்றும் ரிலீஸ் தேதி

Wednesday, January 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடிப்பில் விஜய்சந்தர் இயக்கிய 'ஸ்கெட்ச்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் வரும் பொங்கல் விருந்தாக வெளிவரும் என்று கூறப்பட்டது. இருப்பினும் இந்த படத்தின் சென்சாருக்கு பின்னரே அதிகாரபூர்வ ரிலீஸ் தேதியை அறிவிக்கவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்

இந்த நிலையில் சற்றுமுன் 'ஸ்கெட்ச் படத்தின் சென்சார் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யூஏ' சான்றிதழ் அளித்துள்ளனர்.

'ஸ்கெட்ச்' படத்தின் சென்சார் முடிந்துவிட்ட நிலையில் இந்த படம் வரும் 12ஆம் தேதி வெளிவரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே சூர்யாவின் 'தானா சேர்ந்த கூட்டம்', அரவிந்தசாமியின் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல், சண்முகப்பாண்டியனின் 'மதுரவீரன்' மற்றும் பிரபுதேவாவின் 'குலேபகாவலி' ஆகிய படங்கள் ஜனவரி 12ல் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment