மகேஷ்பாபுவுடன் விஜய், விஜய்யுடன் விக்ரம்: புதுமையான கூட்டணி

  • IndiaGlitz, [Tuesday,September 19 2017]

இன்றைய கோலிவுட் திரையுலகினர் ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்கின்றனர் என்பது பல நிகழ்ச்சியில் இருந்து தெரியவந்துள்ளது. குறிப்பாக ஒரு பிரபல நடிகர் நடித்த படத்தின் டீசர், டிரைலர் ஆகியவற்றை இன்னொரு பிரபலம் வெளியிடுவது என்பது தற்போது சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஒரு பிரபலத்தின் படம் ரிலீஸ் ஆகும்போது அந்த படத்தின் இடைவேளையில் இன்னொரு பிரபல நடிகர் படத்தின் டீசர் அல்லது டிரைலர் திரையிடப்படுவது ஒரு டிரெண்டாக மாறி வருகிறது.

அந்த வகையில் மகேஷ்பாபுவின் 'ஸ்பைடர்' மற்றும் விஜய்சேதுபதியின் 'கருப்பன்' படத்தின் இடையில் தளபதி விஜய்யின் 'மெர்சல்' படத்தின் டீசர் திரையிடப்படவுள்ளதாக வெளிவந்த செய்தியை நேற்று பார்த்தோம்

இந்த நிலையில் வரும் தீபாவளி அன்று திரைக்கு வரும் 'மெர்சல்' படத்தின் இடைவேளையின்போது சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச்' படத்தின் டீசர் திரையிடப்படவுள்ளதாக தற்போது செய்தி வெளிவந்துள்ளது. இந்த தகவல் விஜய், விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு கொண்டாட்டம் என்பதை சொல்லவும் வேண்டுமா?

More News

பெண் எம்.எல்.ஏவிடம் பாராட்டு பெற்ற 'மகளிர் மட்டும்'

கடந்த வாரம் வெளிவந்த ஜோதிகாவின் 'மகளிர் மட்டும்' திரைப்படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களின் பாராட்டை பெற்றது மட்டுமின்றி பல விஐபிக்கள் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்

கார்த்தியின் 'தீரன் அத்தியாயம் ஒன்று' ரிலீஸ் தேதி அறிவிப்பு

பிரபல நடிகர் கார்த்தி நடித்து வரும் 'தீரன் அத்தியாயம் ஒன்று' திரைப்படம் தளபதி விஜய்யின் 'மெர்சல்' வெளியாகும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று பரவலாக செய்திகள் கடந்த சில நாட்களாக பரவியது

நியூயார்க்கில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா பிறந்த நாள் கொண்டாட்டம்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதியுடன் நயன்தாரா நடித்த 'நானும் ரெளடிதான்' வெற்றி படத்தின் படப்பிடிப்பின்போதே விக்னேஷ்சிவன் - நயன்தாரா இடையே காதல் மலர்ந்தது என்று கூறப்பட்டது.

சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச்' ரிலீஸ் தேதி குறித்த தகவல்

விக்ரம் நடித்துள்ள 'ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்களை இயக்குனர் விஜய்சந்தர் தெரிவித்துள்ளார்.

18 தொகுதிகள் காலி: தேர்தல் ஆணையத்திற்கு பேரவை செயலாளர் கடிதம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவியை தொடர்வதற்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக தினகரன் அணியை சேர்ந்த 19 எம்.எல்.ஏக்கள் கவர்னரிடம் தனித்தனியாக மனுகொடுத்தனர்