close
Choose your channels

சீயான் விக்ரமின் 'ஸ்கெட்ச்' ரிலீஸ் தேதி குறித்த தகவல்

Tuesday, September 19, 2017 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சீயான் விக்ரம் நடித்துள்ள 'ஸ்கெட்ச்' படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல்களை இயக்குனர் விஜய்சந்தர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் டீசர் வரும் அக்டோபரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும், இந்த படத்தின் ரிலீஸ் தேதி வரும் 22ஆம் தேதி வெள்ளியன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். அக்டோபர் 18ஆம் தேதி தளபதி விஜய்யின் 'மெர்சல்' வெளியாவதை அடுத்து 'ஸ்கெட்ச்' திரைப்படம் அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பரில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரமுடன் முதல்முறையாக தமன்னா ஜோடி சேர்ந்திருக்கும் இந்த படத்தில் ஸ்ரீபிரியங்கா, ராதாரவி, சூரி, ஸ்ரீமான், ஆர்.கே.சுரேஷ், வேலராமமூர்த்தி உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்து வருகிறார். சுகுமார் ஒளிப்பதிவில், ரூபன் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.