கேப்டன்சி தல… தோனி பற்றி மறக்கவே முடியாத சில சுவாரசியச் சம்பவங்கள்!

இந்திய அணிக்காக 3 முறை ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்தவர், இந்தியாவின் 28 ஆண்டுகால உலகக்கோப்பை கனவை நனவாக்கியவர், இன்றைக்கும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கேப்டன் என்றால் அது அவர்தான் என்ற அளவிற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். இப்படி தல தோனியின் கிரிக்கெட் ஜாம்பவத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

தற்போது தல தோனியின் 40 ஆவது பிறந்த நாளை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இந்தத் தருணத்தில் ரசிகர்களுக்கு அவர் கொடுத்த சில மறக்கவே முடியாத சுவாரசியச் சம்பவங்களை இங்குப் பார்க்கலாம். கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென ஒரு தனி பாணியைக் கொண்ட வீரர். யாருடைய தயவையும் எதிர்பார்க்காத கடின உழைப்பாளி. பல இளம் வீரர்களுக்கு எழுச்சி நாயகன்.

இந்த நயாகன் தனது கேப்டன்ஷியில் பல சாதனைகளை செய்ததோடு தொடர்ந்து ரசிகர்களுக்கும் மறக்கவே முடியாத சில சுவாரசியச் சம்பவங்களை ஏற்படுத்தி இருக்கிறார். அந்த வகையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன்ஷியில் இருந்து விலகுவதாக அறிவிக்கிறார். இதனால் தோனியின் கேப்டன்ஷியை இனி பார்க்கவே முடியாது என்று ரசிகர்கள் பலரும் புலம்புகின்றனர்.

இந்தப் புலம்பலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கடந்த 2017 இல் பிசிசிஐ இங்கிலாந்துக்கு எதிரான போட்டித் தொடருக்கு கேப்டனாக விராட் கோலியை அறிவிக்கிறது. அதன் பயிற்சி போட்டிக்கு எம்.எஸ்.தோனியை கேப்டனாக அறிவிக்கிறது. பொதுவா பயிற்சி ஆட்டங்களை பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் விரும்புவதில்லை. ஆனால் கேப்டன் தோனி வழிநடத்திய அந்த பயிற்சி ஆட்டத்திற்கு மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களும் குவிந்தனர்.

இதனால் கிட்டத்தட்ட மைதானமே நிரம்பி வழிந்தது. இந்தத் தருணத்தைப் பார்த்த இங்கிலாந்து வீரர்கள் பலரும் ஆச்சர்யம் அடைந்தனர். மேலும் இது வரலாற்றில் எழுதி வைக்க வேண்டிய தருணம் என்று குறிப்பிட்டு உள்ளனர். இப்படி ஓயாமல் இந்தியக் கிரிக்கெட்டுக்காக தனது உழைப்பை கொடுத்த அந்த அதிரடி ஆட்டக்காரன் கடைசியாக கடந்த 2019 ஆகஸ்ட் 7.29 மணிக்கு தனது இந்தியக் கிரிக்கெட் ஓய்வையும் ஒரு சிம்பிள் இன்ஸ்டா பதிவில் தெரிவித்தார். அதாவது 19.29 மணியில் இருந்து இந்தியக் கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது இன்ஸ்டாவில் தல தோனி அறிவித்து இருந்தார். இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஒட்டுமொத்த ரசிகர்களும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி இருந்தனர்.

கூடவே அதென்ன 19.29 என்ற மணி கணக்கையும் ரசிகர்கள் ஆராய்ச்சி செய்ய துவங்கி விட்டனர். இந்தியக் கிரிகெட் அணி உலகக்கோப்பை அரை இறுதிச்சுற்றிற்காக நியூசிலாந்து அணியுடன் மோதியது. இங்கிலாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தோனி ரன் அவுட்டாகி ரசிகர்களை ஏமாற்றினார். இதனால் இந்தியா மீண்டும் ஒருமுறை உலகக் கோப்பை வெல்லும் வாய்ப்பை அதிர்ஷ்டவசமாக இழந்து இருந்தது.

18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வி அடைந்த நிலையில் இங்கிலாந்து நேரப்படி 19.29 மணிக்கு இந்தியா அரை இறுதிச்சுற்றில் இருந்து வெளியேறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை நினைவூட்டும் விதமாகவே தோனி அந்த நேரத்தை தனது ஓய்வின்போது குறிப்பிட்டு இருந்தார். மேலும் அந்த ஓய்வு அறிவிப்பில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அபிதாப் பச்சன் நடித்த ஒரு பாடலும் இடம் பெற்று இருந்தது.

இந்த பாடலுக்கு பின்னால் ஒளிந்து இருந்த ரகசியத்தையும் ரசிகர்கள் அப்போதே வெளிப்படுத்தி இருந்தனர். அதாவது தல தோனி அபிதாப் பச்சனின் தீவிர ரசிகர். அவருக்கு மரியாதை செய்யும் விதமாகவே அபிதாப்பின் பாடலை பின்னணியில் ஒலிக்க விட்டு இருந்தார். இப்படி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு சரித்திர நாயகனாக வலம் வந்த கேப்டன் தோனி தனது 40 பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.

More News

நான் என் அதிர்ஷ்டத்தை கண்டுபிடித்த நாள்: திருமண புகைப்படத்தை வெளியிட்ட நடிகர்!

பிரபல தமிழ் நடிகர் ஒருவர் தனது திருமண நாள் புகைப்படத்தை வெளியிட்டு என்னுடைய அதிர்ஷ்டத்தை கண்டுபிடித்த நாள்' என்று பதிவு செய்துள்ளார்.

கமல், ரஜினியுடன் நடித்த மாதவியின் 3 மகள்கள்: வைரல் புகைப்படம்!

கமல் ரஜினி உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்த நடிகை மாதவியின் மூன்று மகள்களின் புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது 

பாலியல் தொல்லை....!திருச்சி பிஷப் கல்லூரி பேராசிரியர் கைது...!

தன்னிடம் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தந்த பிஷப் கல்லூரி பேராசிரியர், பால் சந்திரமோகனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

ஒரே டீமில் 7 பேருக்கு கொரோனா… ஒரே இரவில் புது அணியை உருவாக்கிய அதிசயம்!

இலங்கைக்கு எதிரான சுற்றுப்பயணத்தில் வெற்றிக் கோப்பையை சுமந்து கொண்டு சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளது

கடற்கரையில் சில்வர் ஃபியூட்டி… பிக்பாஸ் தமிழ் நடிகையின் வைரல் புகைப்படம்!

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ பிக்பாஸ்.