ஊரடங்கு உத்தரவு போட்டும் திருந்தாத டெல்லி மக்கள்: அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நேற்று 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார். இந்த 21 நாட்களிலும் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகள் இன்றி வெளியே வரவேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார். 21 நாட்கள் பொதுமக்கள் கட்டுப்பாடாக இல்லை எனில் நாடு 21 வருடங்கள் பின்னோக்கி செல்லும் நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பொறுப்பு உள்ளது என்பதால் இதனை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருந்தார்

பிரதமரின் இந்த வேண்டுகோளை ஏற்று பெரும்பாலானோர் வீட்டுக்குள் முடங்கி இருந்தாலும் ஒரு சில அசட்டு தைரியம் காரணமாகவும், நிர்ப்பந்தம் காரணமாகவும் வெளியே வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக பிரதமர் இருக்கும் தலைநகர் டெல்லியிலேயே பொதுமக்கள் நடமாட்டம் வழக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது

கொரோனா வைரஸின் தீவிரத்தை டெல்லியில் உள்ள படித்தவர்களே உணராத போது சிறு கிராமத்தில் உள்ளவர்கள் எப்படி உணர்ந்திருக்க முடியும்? என்ற கேள்வி எழுகிறது. மேலும் டெல்லி, சென்னை உள்பட ஒரு சில பெருநகரங்களில் தனியார் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு விடுப்பு அளிக்கவில்லை என்றும் அலுவலகத்திற்கு வரவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இது போன்ற நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

21 நாட்கள் பொதுமக்கள் வீட்டில் முடங்கி கிடப்பதால் நஷ்டம் ஏற்படுவது என்னவோ உண்மைதான், ஆனால் அதே நேரத்தில் எல்லாவற்றையும் விட மனித உயிர் மிகவும் முக்கியம் என்பதால் அரசின் அறிவுரையை ஏற்று அனைவரும் வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்

More News

ராணுவத்தை அழைப்பேன், வெளியே நடமாடினால் கண்டதும் சுட உத்தரவு: முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்

நேற்று நள்ளிரவு முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த ஊரடங்கு உத்தரவை அனைத்து இந்திய மக்களும் தவறாது கடைபிடிக்க வேண்டும்

அவனை உதாசீனித்தவர் பதவி இழப்பர். இது சரித்திரம்: கமல்ஹாசன்

கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே தற்போது பெரும் போராட்டம் நடத்தி வருகிறது. ஒவ்வொரு நாட்டு அரசும் கொரோனா வைரஸிடம் இருந்து மக்களை காப்பது எப்படி என்று புரியாமல் தவித்து வருகிறது

சென்னையைச் சேர்ந்த மேலும் மூவருக்கு கொரோனா வைரஸ்: அதிர்ச்சி தகவல் 

தமிழகத்தில் ஏற்கனவே 15 பேர் கொரோனா வைரசால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

கொரோனா; அடுத்த 3 மாதங்களுக்கு ATMகளில் சேவைக்கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்!!!

கொரோனா பரவலைத் தடுக்க அடுத்த 21 நாளுக்கு ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அமல்படுத்தி உத்தரவிட்டார்.

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் முதல் பலி

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மதுரையில் சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.