இது ஒன்றும் அவமானமல்ல, பெருமைதான்: சுஷாந்த்சிங் தற்கொலை விவகாரம் குறித்து பிரபல நடிகை

  • IndiaGlitz, [Tuesday,June 23 2020]

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத் அவர்கள் சமீபத்தில் தனது வீட்டில் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பாலிவுட் திரை உலகையே உலுக்கியது. அதுமட்டுமன்றி சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பாலிவுட் பிரபலங்கள் தான் காரணம் என்றும் அவருக்கு வந்த பட வாய்ப்புகளை வேண்டுமென்றே தட்டிப் பறித்ததால் அவருக்கு மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து சல்மான்கான், கரன் ஜோகர் உள்பட 8 பாலிவுட் பிரபலங்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பாலிவுட்டில், பிரபலங்களின் வாரிசுகள் தவிர வேறு யாரும் வளர்ச்சி அடைய முடியவில்லை என்றும் புதிதாக யாரும் திரை உலகில் வளர்ச்சி அடைந்தால் அவர்கள் நசுக்கப்படுகிறார்கள் என்றும் ரசிகர்கள் கொந்தளித்து எழுந்தனர். இதுகுறித்து ரசிகர்கள் காரசாரமாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது இதனால் பாலிவுட்டில் வாரிசு நடிகர் நடிகைகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் அனில் கபூரின் மகளும் பிரபல நடிகையுமான சோனம் கபூர், வாரிசு நடிகை என்ற குற்றச்சாட்டு குறித்து சமூக வலைத்தளத்தில் கூறியபோது ’ஆம் நான் என் தந்தையின் வாரிசுதான். அவரால்தான் நான் இந்த இடத்திற்கு வந்து உள்ளேன். இது ஒன்றும் எனக்கு அவமானம் அல்ல. இந்த இடத்தை எனக்கு கொடுக்க எனது தந்தை எவ்வளவு கடுமையாக உழைத்தார் என்பது எனக்கு மட்டுமே தெரியும். அவரது மகளாக இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன்’ என்று கூறியுள்ளார்.

சோனம் கபூரின் இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்த்து கமெண்ட்டுகள் பதிவாகி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

More News

வியாபாரக் காற்றில் மாய்ந்து போகும் மகாகவிகள்: நாதஸ்வர கலைஞர் குறித்து கமல்ஹாசனின் கவிதை

உலக நாயகன் கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் நாதஸ்வர கலைஞர் பாகநேரி கே.பிள்ளையப்பன் என்பவரது நாதஸ்வர வீடியோவை பதிவு செய்து அதுகுறித்து ஒரு கவிதையை தனது பாணியில் எழுதியுள்ளார். அந்த கவிதை இதோ:

ஐடி ஊழியர்களின் தலையில் விழுந்த இடி... அமெரிக்கா முன்னெடுக்கும் நடவடிக்கையால் பாதிப்பு!!!

அமெரிக்க தொழிலாளர் சந்தையில் வெளிநாட்டு தொழிலாளர்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதாகவும் கொரோனா நேரத்தில் இத்தகைய செயல்பாடுகள்

அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராகும் தமிழர்!!!

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் என்பவர் அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார்.

இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் யோகா புகைப்படம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவது தெரிந்ததே. கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் இந்த யோகா தினம்

சென்னை, கோவை, செஞ்சி: மூன்று ஊர்களில் மூன்று திருமணம் செய்த பலே வாலிபர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சொந்த ஊரில் ஒரு திருமணமும், பின்னர் வேலை நிமித்தம் கோவை மற்றும் சென்னை சென்றபோது அங்கு இரண்டு திருமணமும் செய்துகொண்ட தகவல் பெரும்