'சூரரை போற்று' இந்தி ரீமேக்கும் ஓடிடி ரிலீஸா? படக்குழுவினர் விளக்கம்!

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓடிடியில் வெளியானது. இந்தப் படம் ரிலீசாகும் சமயத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் முதல் அலை உச்சத்தில் இருந்ததால் வேறு வழியின்றி ஓடிடியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்பட 5 தேசிய விருதுகளை பெற்ற நிலையில் தற்போது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது என்பதும் சூர்யாவின் வேடத்தில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார் என்பதும் தமிழில் இந்த படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தியில் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூரரைப்போற்று தமிழ் படம் போலவே இந்தி ரீமேக் திரைப்படமும் முன்னணி ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவியது.

ஆனால் இந்த செய்தியை படக்குழுவினர் மறுத்துள்ளனர். சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் திரைப்படம் கண்டிப்பாக பெரிய திரையில் தான் ரிலீஸாகும் என்றும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் தவறானது என்றும் தெரிவித்துள்ளனர்.

More News

இளைஞர்களை மயக்கும் மடோனா செபாஸ்டியன்: செம கிளாமர் புகைப்படங்கள்!

அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய 'பிரேமம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின் தமிழ், மலையாள படங்களில் நடித்து வரும் மடோனா செபாஸ்டியன் இளைஞர்களை மயக்கும் வகையில் செம கிளாமர் புகைப்படங்களை

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருமை சேர்த்த கனடா மேயர்: வைரலாகும் புகைப்படம்!

இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மானுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கனடாவை சேர்ந்த மேயர் ஒருவர் அந்நாட்டிலுள்ள தெரு ஒன்றுக்கு ஏஆர் ரஹ்மான் தெரு என பெயர் சூட்டி உள்ளார்.

'ஜவான்' படத்தில் மிரட்டும் வில்லன்: விஜய்சேதுபதிக்கு இத்தனை கோடி சம்பளமா?

 ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜவான்' படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருக்கும் நிலையில் இந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்க மிகப் பெரிய தொகையை சம்பளமாக

'அடையாறுல உனக்கு ஒரு பங்களா வாங்கி தர்றேன்: வருங்கால மனைவிக்கு வாக்குறுதி அளித்த புகழ்!

 விஜய் டிவி புகழ் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி தனது நீண்டநாள் காதலி பென்சியாவை திருமணம் செய்ய இருக்கும் நிலையில் தனது வருங்கால மனைவிக்கு அடையாறில் பங்களா வாங்கி தருவதாக

'பத்து தல' படத்தின் மாஸ் அப்டேட் தந்த 'அசுரன்' நடிகர்!

சிம்பு நடிப்பில் உருவாகி வரும் 'பத்து தல' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் இந்த படப்பிடிப்பில் சிம்பு உள்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டு வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.