close
Choose your channels

'சூரரை போற்று' இந்தி ரீமேக்கும் ஓடிடி ரிலீஸா? படக்குழுவினர் விளக்கம்!

Monday, August 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூர்யா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் இசையில் உருவான சூரரைப்போற்று திரைப்படம் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஓடிடியில் வெளியானது. இந்தப் படம் ரிலீசாகும் சமயத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் முதல் அலை உச்சத்தில் இருந்ததால் வேறு வழியின்றி ஓடிடியில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை உள்பட 5 தேசிய விருதுகளை பெற்ற நிலையில் தற்போது இந்தியில் ரீமேக் ஆகி வருகிறது என்பதும் சூர்யாவின் வேடத்தில் அக்ஷய் குமார் நடித்து வருகிறார் என்பதும் தமிழில் இந்த படத்தை இயக்கிய சுதா கொங்கரா இந்தியில் இயக்கி வருகிறார் என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூரரைப்போற்று தமிழ் படம் போலவே இந்தி ரீமேக் திரைப்படமும் முன்னணி ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும் ஊடகங்களில் செய்திகள் பரவியது.

ஆனால் இந்த செய்தியை படக்குழுவினர் மறுத்துள்ளனர். சூரரைப்போற்று ஹிந்தி ரீமேக் திரைப்படம் கண்டிப்பாக பெரிய திரையில் தான் ரிலீஸாகும் என்றும் ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் தவறானது என்றும் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.