'தலைவர் 168' படத்தில் ரஜினியுடன் முதல்முறையாக இணையும் பிரபல காமெடி நடிகர்!

  • IndiaGlitz, [Tuesday,October 22 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில், லைகா தயாரிப்பில் உருவாகியுள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் பொங்கலன்று பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் பிரபல இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள ’தலைவர் 168’ திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளிவந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் டிசம்பர் முதல் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் நடிக்கும் நாயகி உட்பட முக்கிய நட்சத்திரங்கள் தேர்வு செய்யும் பணிகள் சிறுத்தை சிவா ஈடுபட்டுள்ளார். இதன்படி இந்த படத்தில் நாயகியாக ஜோதிகா, மஞ்சுவாரியார், கீர்த்தி சுரேஷ் உள்பட ஒரு சில நடிகைகள் பரிசீலனையில் இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த நிலையில் இந்த படத்தில் காமெடி கேரக்டரில் நடிக்க நடிகர் சூரி ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் ரஜினியின் படத்தில் முதன்முதலாக சூரி நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் சிறுத்தை சிவா இயக்கிய ’வேதாளம்’ படத்தில் ஏற்கனவே சூரி நடித்துள்ளார் என்பது தெரிந்ததே.

More News

விஜய்யின் 'பிகில்' கதை விவகார வழக்கின் தீர்ப்பு!

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படம் வரும் 25ஆம் தேதி உலகம் முழுவதும்

அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக வெளிநாடு செல்லும்'இந்தியன் 2' படக்குழு

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'இந்தியன் 2'. இந்தப் படம் கடந்த 1996ம் ஆண்டு வெளிவந்த 'இந்தியன்'

சக்சஸ் ஆனது பிக்பாஸ் காதல்: பிக்பாஸ் வின்னரை மணக்கும் சக போட்டியாளர்

பிரபல கன்னட திரையுலக இசையமைப்பாளரும் பிக்பாஸ் கன்னடம் 5 நிகழ்ச்சியின் வின்னருமான சந்தன் ஷெட்டி, அதே நிகழ்ச்சியில் 4வது இடம்பெற்ற நிவேதா கெளடா என்ற பெண்ணை திருமணம் செய்யவுள்ளார்.

அதிர்ஷ்டம் இருக்கு, அறிவு இல்லை: 'கைதி' டிக்கெட் எடுத்த ரசிகரை கலாய்த்த தயாரிப்பாளர்

வரும் வெள்ளியன்று விஜய் நடித்த 'பிகில்' மற்றும் கார்த்தி நடித்த 'கைதி' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ள நிலையில் விஜய் மற்றும் கார்த்தி ரசிகர்கள் டுவிட்டரில் சரமாரியாக மோதிக்கொள்கின்றனர்.

அரசு அறிவிப்பால் 'பிகில்', 'கைதி' படக்குழுவினர்களுக்கு கொண்டாட்டம்

விஜய் நடித்த 'பிகில்' மற்றும் கார்த்தி நடித்த 'கைதி' ஆகிய இரண்டு திரைப்படங்கள் வரும் அக்டோபர் 25-ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது.