close
Choose your channels

செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் படம் கிரிக்கெட் வீரரின் பயோபிக் படமா? ரஜினிக்கு என்ன கேரக்டர்?

Thursday, February 29, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் விரைவில் ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகளை அவர் தொடங்கி விட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் இயக்கும் திரைப்படம் பிரபல கிரிக்கெட் வீரரின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் என்று கூறப்படுகிறது.

ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ’லால் சலாம்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பதும் இந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்திலும் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கசிந்த தகவல் படி சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படம் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் வேண்டும் இந்த படத்தை சாஜித் நாடியவாலா தயாரிக்க இருப்பதாகவும் இது ’தலைவர் 172’ படமாக அமைய இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட ரஜினிகாந்த் மற்றும் சாஜித் நாடியவாலா சந்திப்பு குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment