ஹாலிவுட்டில் தயாராகும் தென்னிந்திய சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. மாஸ் தகவல்..!

  • IndiaGlitz, [Tuesday,July 11 2023]

தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன படத்தின் இரண்டாம் பாகம் ஹாலிவுட்டில் உருவாக இருப்பதாகவும் அதில் முதல் பாகத்தில் நடித்த தென்னிந்திய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர்’. இந்த படம் ரூ.550 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில் ரூ.1200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் எஸ்.எஸ். ராஜமவுலி தற்போது மகேஷ் பாபு படத்தில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தை அவருடைய மேற்பார்வையில் அவருடைய உதவி இயக்குனர்களில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் முழுக்க முழுக்க ஹாலிவுட்டில் தயாராக இருப்பதாகவும் முதல் பாகத்தில் நடித்த நட்சத்திரங்களுடன் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களும் இந்த படத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகேஷ் பாபுவின் படத்தை முடித்தவுடன் மகாபாரத கதையை பிரமாண்டமாக உருவாக்க எஸ்.எஸ்.ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More News

60 வயதில் திருமணம் செய்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி… மனைவியுடன் சுற்றுலா புகைப்படம்!

நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவருடைய மனைவியுடன் சுற்றுலா சென்றிருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கும் நிலையில்...

என் மனைவிக்கு தமிழில் கெட்டவார்த்தை தெரியும்: 'எல்ஜிஎம்' ஆடியோ விழாவில் தோனி கலகல பேச்சு..!

தோனி தயாரித்த 'எல்ஜிஎம்' படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் நேற்று சென்னையில் நடந்த நிலையில் அதில் தோனி மற்றும் அவரது மனைவி சாக்சி தோனி கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தோனி ஜாலியாக பேசினார்.

'நான் என்ன காரா? பைக்கா? பழகி பார்த்து ஓகே சொல்வதற்கு? 'எல்ஜிஎம்' டிரைலர்..!

தோனி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, விஜே விஜய் நடிப்பில் உருவான 'எல்ஜிஎம்' படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

'அணையாது எரியும் ஒரு பெயர் நீ'.. அர்ஜுன் தாஸ் நடித்த 'அநீதி' டீசர்..!

பிரபல இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான 'அநீதி' என்ற திரைப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்த கடினமான 6 மாதங்கள்: சமந்தாவின் உருக்கமான பதிவு..!

 தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையான சமந்தா கடினமான ஆறு மாதங்கள் முடிவுக்கு வந்துள்ளதாக உருக்கமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.