close
Choose your channels

ஹாலிவுட்டில் தயாராகும் தென்னிந்திய சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகம்.. மாஸ் தகவல்..!

Tuesday, July 11, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தென்னிந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆன படத்தின் இரண்டாம் பாகம் ஹாலிவுட்டில் உருவாக இருப்பதாகவும் அதில் முதல் பாகத்தில் நடித்த தென்னிந்திய நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ’ஆர்.ஆர்.ஆர்’. இந்த படம் ரூ.550 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட நிலையில் ரூ.1200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூனியர் என்டிஆர், ராம்சரண் தேஜா, அஜய் தேவ்கன், ஆலியா பட் உள்பட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

ஆனால் எஸ்.எஸ். ராஜமவுலி தற்போது மகேஷ் பாபு படத்தில் பிஸியாக இருப்பதால் இந்த படத்தை அவருடைய மேற்பார்வையில் அவருடைய உதவி இயக்குனர்களில் ஒருவர் இயக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த படம் முழுக்க முழுக்க ஹாலிவுட்டில் தயாராக இருப்பதாகவும் முதல் பாகத்தில் நடித்த நட்சத்திரங்களுடன் ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர்களும் இந்த படத்தில் இணைய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் மகேஷ் பாபுவின் படத்தை முடித்தவுடன் மகாபாரத கதையை பிரமாண்டமாக உருவாக்க எஸ்.எஸ்.ராஜமவுலி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment