இறந்து போன மகளை விர்ச்சுவல் உலகத்தில் பார்த்து ரசித்த அம்மா..! வேகம் பெறும் VR தொழில்நுட்பம்.- வீடியோ

  • IndiaGlitz, [Thursday,February 13 2020]

இறந்து போனவர்களை திரும்பவும் சந்திப்பது என்பது இயலாத காரியம். அன்புக்குரியவர்கள் இறந்தால் அவர்களின் நினைவுகளையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் தவிர எதுவும் நம்மிடம் எஞ்சியிருப்பது இல்லை. ஆனால் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் இந்த சோகத்தை மாற்றும் என நம்பிக்கை பிறந்துள்ளது.    

கண்டறியப்படாத ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு 2016-ஆம் இறந்துவிட்ட தனது மகளை வி.ஆர் ( Virtual Reality) தொழில்நுட்பம் மூலமாக சந்தித்த நிகழ்வை ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது தென்கொரியாவைச் சேர்ந்த ”Meeting You திரைக்குழு. கொரியாவைச் சேர்ந்த எம்.பி.சி என்ற நிறுவனம், சிறுமி நயோனின் உருவத்தை உண்மைக்கு மிக நெருக்கமாக வடிவமைத்துள்ளது.  

சிறப்பு கையுறை அணிந்து, தன் மகளின் நிழலைப் பார்க்கும் தாய் ஜாங்-ஜி-சங், மகள் நேயோனை தொட முயற்சிக்கிறார். இந்த அனுபவத்தைத் குறித்து தெரிவித்த ஜாங், “இது எனது கனவு. அந்த கனவை நான் வாழ்ந்துவிட்டேன்” என்கிறார்.

நெகிழ்ச்சியான இந்த சம்பவத்துக்கு பலர் மகிழ்ச்சி தெரிவித்து வந்தாலும், உளவியல் ரீதியாக இது எந்த விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்யாமல், இதை ஊக்குவிப்பது சரியானதல்ல என உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

More News

மாஸ்டரை ஹெட்மாஸ்டராக ஆக்கிவிடாதீர்கள்: அரசியல்வாதிகளுக்கு விஜய் ரசிகர்கள் எச்சரிக்கை

தளபதி விஜய் நடித்த திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே சர்ச்சைக்கு பின்னரோ அல்லது வெளிவந்த பின்னர் சர்ச்சை ஏற்படுவதோ வழக்கமாகி வருகிறது

பண்டைய தமிழர்கள் ஏன் மரங்களை வழிபட்டார்கள்? கோவில்களில் கொடி மரம் எப்படி வந்தது?

பண்டை தமிழ் மக்கள் மரம், செடி, கொடி, சூரியன் என்று இயற்கை தெய்வங்களை வழிபட்டார்கள்

பிக்பாஸ் ரைசா காதலன் யார்? ஜிவி பிரகாஷ் வெளியிட்ட வீடியோ

பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரைசா வில்சன் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் நடித்த 'பியார் பிரேம் காதல்' உள்பட ஒரு சில படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

'ஒரு குட்டிக்கதை' பாடலை எழுதியவர் பிரபல இயக்குனரா?

விஜய் நடித்துவரும் 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கிவிட்டது

ரஜினி, கமல், அஜித், விஜய் தான் எங்களை காப்பாற்ற வேண்டும்: ஜப்பான் கப்பலின் சிக்கியுள்ள தமிழரின் வீடியோ

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு பயணிகள் கப்பலொன்று சுமார் 3700 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அந்த கப்பலில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியதால்