close
Choose your channels

ரஜினி, கமல், அஜித், விஜய் தான் எங்களை காப்பாற்ற வேண்டும்: ஜப்பான் கப்பலின் சிக்கியுள்ள தமிழரின் வீடியோ

Thursday, February 13, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ஹாங்காங்கில் இருந்து ஜப்பானுக்கு பயணிகள் கப்பலொன்று சுமார் 3700 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அந்த கப்பலில் உள்ளவர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியதால் அந்த கப்பலை எந்த நாட்டின் துறைமுகம் அனுமதிக்கவில்லை. இதனால் இந்த கப்பால் தற்போது நடுக்கடலில் ஒரு வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது.

பிப்ரவரி 5ஆம் தேதி முதல் நடுக்கடலில் நிறுத்தப்பட்டுள்ள இந்த கப்பலில் மொத்தம் 135 பேர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை தனிமைபப்டுத்தாமல் இருப்பதால் மேலும் பலருக்கு இந்த வைரஸ் பரவி வருவதாகவும் அதிர்ச்சி தகவல் ஒன்று வந்துள்ளது

இந்த கப்பலில் தமிழர்கள் உட்பட இந்தியர்கள் சிலர் சிக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த நிலையில் இந்த கப்பலில் இருந்து மதுரையை சேர்ந்த அன்பழகன் என்பவர் வீடியோ ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியபோது ’எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள். இந்திய அரசு எங்களை எப்படியும் காப்பாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின், ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் ஏதாவது நடவடிக்கை எடுத்து எங்களை காப்பற்ற வேண்டும். பிரதமர் மோடி எங்களுக்கு கடவுள் மாதிரி. பாகிஸ்தானில் சிக்கிய அபிநந்தனை எப்படிக் காப்பாற்றினாரோ அதேபோல் எங்களையும் காப்பாற்றுவார் என நம்புகிறோம் என தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.