close
Choose your channels

லாட்டரியில் பரிசு: உண்மையாகிய கவுண்டமணி ஜோக்!

Wednesday, December 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி ஒரு படத்தில் தனக்கு லாட்டரி சீட்டு விழுந்ததாக எண்ணிக் கொண்டு தான் வேலை பார்க்கும் முதலாளியிடம் திமிருடன் பேசுவார், அதுமட்டுமின்றி தான்தான் இனிமேல் முதலாளி என்றும் இந்த தெருவையே தான் விலைக்கு வாங்கப் போகிறேன் என்று உதார் விட்டுக் கொண்டிருப்பார். ஆனால் சில நிமிடங்களில் அவருக்கு பரிசு விழவில்லை என்று தெரிந்ததும் சோகமாக மாறிவிடுவார்.

தமிழ் சினிமாவில் வந்த இந்த காமெடி காட்சி தற்போது ஸ்பெயின் நாட்டில் நிஜமாகவே நடந்துள்ளது. ஸ்பெயின் நாட்டின் கிறிஸ்துமஸ் சிறப்பு லாட்டரி குலுக்கல் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு வந்தது. இந்த நேரடி ஒளிபரப்பை நடாலியா என்ற பெண் செய்தியாளர் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது முதல் பரிசான ரூ 220 கோடிக்காண எண் அறிவிக்கப்பட்டது. அந்த எண் கொண்ட லாட்டரி சீட்டு தன்னிடம் இருப்பதாக கருதி கொண்டு அந்த பெண் செய்தியாளர் துள்ளி குதித்தார். இனிமேல் வேலைக்கு செல்லப்போவதில்லை என்றும் இந்த பணத்தை வைத்து மகிழ்ச்சியாக குடும்பத்துடன் இருக்கப் போவதாகவும் அவர் நேரடி ஒளிபரப்பில் தெரிவித்தார்.

ஆனால் அவர் வாங்கிய சீட்டுக்கு உண்மையில் ரூபாய் 4 லட்சம் தான் விழுந்திருக்கிறது என்ற உண்மை பின்னர் தெரியவந்ததும் சோகமாகி அவர் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டார். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.