மயக்க நிலையிலிருந்து மீண்டார் எஸ்பிபி: மகிழ்ச்சியான செய்தி கூறிய எஸ்பிபி சரண்

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கடந்த சில நாட்களாக சீராக இருப்பதாக மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று தனது தந்தை கண்விழித்து பார்த்ததாகவும் தன்னையும் தனது தாயாரையும் நலம் விசாரித்ததாகவும் எஸ்பிபி சரண் அவர்கள் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் தற்போது எஸ்பிபி சரண் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், ‘எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் 90% மயக்க நிலையிலிருந்து மீண்டு விட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவர்களிடம் எஸ்பிபி உடல்நிலை குறித்து தான் சற்றுமுன் பேசியதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல்நிலை நன்றாக ஒத்துழைப்பதாகவும், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர் என்றும் கூறினார். மேலும் விரைவில் தனது தந்தையை ஆரோக்கியமான ஒரு நபராக அனைவரும் காணலாம் என்றும் அந்த நாள் நம் அனைவருக்கும் இனிமையான நாளாக அமையும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் எஸ்பிபி அவர்கள் குணமாக நடத்தப்பட்ட பிரார்த்தனைகளுக்கு தாமும் தனது குடும்பத்தாரும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தனது தந்தையின் சிகிச்சைக்கு இரவு பகலாக பாடுபட்ட மருத்துவர்களுக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

View this post on Instagram

#SPB health update

A post shared by S. P. Charan/Producer/Director (@spbcharan) on Aug 25, 2020 at 3:59am PDT

More News

உங்கள் முடிவை மறுபரிசீலனை செய்யுங்கள்: சூர்யாவுக்கு ஹரி வேண்டுகோள்

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில் இருந்தே சூர்யாவின் முடிவு குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன

தமிழக அரசியல் களம் உங்களைக் காணக் காத்திருக்கிறது: கமல் வாழ்த்து கூறியது யாருக்கு?

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இன்று காலை முதல் தொடர்ச்சியாக

நித்தியானந்தா மீது அன்பை வெளிப்படுத்திய மீரா மிதுன்: கைலாசாவுக்கு செல்ல ஆசை என டுவீட்

பாலியல் வழக்கில் சிக்கிய இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியான நித்தியானந்தா, கைலாசா என்ற நாட்டை தான் உருவாகியுள்ளதாகவும் அந்த நாட்டிற்கு தானே அதிபர் என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டார்.

கார்த்தியின் 'சுல்தான்' படம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!

கார்த்தி நடித்து முடித்துள்ள 'சுல்தான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் கிட்டத்தட்ட நிறைவடையும் நேரத்தில்

மாணவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லை… வீட்டுச்சுவரில் பாடம் நடத்தி அசத்தும் பள்ளி!!!

கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கிறது