தெர்மோகோல் அமைச்சரை கலாய்த்த கமல். இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு

  • IndiaGlitz, [Tuesday,April 25 2017]

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தனது சமூக வலைத்தளத்தில் அரசியல் மற்றும் சமூக கருத்துக்களை பரபரப்பாக பதிவு செய்து வருகிறார். இதனால் ஒருசில அரசியல்வாதிகள் கமல்ஹாசனை கடுமையாக விமர்சித்தும், ஒருசிலர் வழக்கும் போட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று இயக்குனர் அட்லியின் தயாரிப்பில் உருவாகி வரும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல் கலந்து கொண்டார். இந்த விழாவில் கமல் பேசியபோது, 'இந்த படத்தின் டிரைலரை பார்த்தேன். நன்றாக வந்துள்ளது. ஒரு சினிமா ரசிகனாக எல்லோருக்கும் முன் இந்த படத்தின் டிரைலரை நான் பார்த்துவிட்டேன் என்பதில் பெருமைபப்ட்டு கொள்கிறேன்

இந்த படத்தின் டிரைலரில் இருந்து இதுவொரு ஆவிக்கதை போல் தெரிகிறது. ஆனால் தெர்மோகோல் போட்டு மூட முடியாத ஆவிகதை' என்று கூறினார். கமல் இவ்வாறு கூறியதும் பலத்த கைதட்டல் எழுந்தது

சமீபத்தில் தமிழக அமைச்சர் ஒருவர் வைகை அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் போட்டு மூட முயற்சி செய்ததும் அந்த திட்டம் தோல்வி அடைந்தது என்பதும் அனைவரும் அறிந்ததே.

More News

விஜய் சாதாரணமாக நடந்து வந்தாலே மாஸ் ஆக இருக்கும். விஜய்சேதுபதி பட நடிகை

தர்மதுரை' படத்தில் விஜய்சேதுபதிக்கு தோழியாகவும், 'றெக்க' படத்தில் விஜய்சேதுபதிக்கு தங்கையாகவும், 'கவண்' படத்தில் விஜய்சேதுபதியின் டீமில் ஒருவராகவும் நடித்தவர் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி. தங்கை, தோழி வேடங்களில் நடித்து வந்த இவர் தற்போது புரமோஷன் ஆகி 'திருப்பதிசாமி குடும்பம்' என்ற படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.

இயக்குனர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு இந்திய அரசின் மிகப்பெரிய விருது

பிரபல தெலுங்கு இயக்குனர் மற்றும் நடிகர் கே.விஸ்வநாத் அவர்களுக்கு இந்திய அரசின் மிகப்பெரிய விருதுகளில் ஒன்றாகிய தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது

டப்பிங் கலைஞர்களின் தேசிய விருது கோரிக்கை: மத்திய அரசு ஏற்குமா?

இந்திய திரைப்பட கலைஞர்களுக்கு பல்வேறு துறைகளில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் சண்டைப்பயிற்சி இயக்குனர்களுக்கும் தேசிய விருது வழங்க வேண்டும் என்ற ஐஸ்வர்யா தனுஷின் கோரிக்கையை ஏற்று இந்த வருடம் முதல் சண்டைப்பயிற்சிக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது

ஒரு ஹீரோவுக்கு எதுக்கு நான்கு ஹீரோயின்? ஜோதிகா ஆவேசம்

ஜோதிகா நடித்த 'மகளிர் மட்டும்' திரைப்படத்தின் பாடல்கள் இன்று சென்னை சத்யம் திரையரங்கில் வெளியானது.

பி.பி.ஓ வேலையைவிட பிச்சை எடுப்பதில் அதிக வருமானம். டெல்லி இளைஞரின் புதிய அனுபவம்

இந்திய தலைநகர் டெல்லியில் பி.பி.ஓ நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் இளைஞர் ஒருவர் தினமும் அலுவலகம் செல்லும்போது ஏராளமான பிச்சைக்காரர்களை பார்த்துள்ளார்...