101 முதியவர்களுக்காக 'பாகுபலி 2' சிறப்புக்காட்சி. ஏ.ஆர்.ரெஹானா ஏற்பாடு

  • IndiaGlitz, [Wednesday,May 10 2017]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, ராணா, தமன்னா, சத்யராஜ், நாசர் உள்பட பலர் நடித்த 'பாகுபலி 2' திரைப்படம் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆகவுள்ளதை அடுத்து இந்த படம் இதுவரை உலகம் முழுவதும் இதுவரை சுமார் ரூ.1300 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திரைப்படமே பார்க்கும் பழக்கம் இல்லாதவர்கள் கூட இந்த படத்தை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா நல்லெண்ண தூதராக பொறுப்பு வகிக்கும் இளைஞர் சமூக அமைப்பு ஒன்று, முதியோர் இல்லத்தில் உள்ள தாய்மார்களை மகிழ்விக்கும் வகையில் இந்த படத்தின் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை அம்பத்தூரில் உள்ள ஒரு திரையரங்கில் 'ஆனந்தம் முதியோர் இல்லத்தில் உள்ள 101 முதியோர்களுக்காக அன்னையர் தினத்தை முன்னிட்டு மே 13ஆம் தேதி சிறப்பு காட்சி திரையிடப்படுகிறது.

More News

விஜய்யை கடவுளாக்கி பிரார்த்தனை செய்து வரும் ரசிகர்கள்

உலகில் உள்ள அனைத்து சினிமா நட்சத்திரங்களின் ரசிகர்களை விட தமிழக சினிமா ரசிகர்கள் கொஞ்சம் வித்தியாசமானவர்கள். தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளுக்காக போஸ்டர் ஒட்டுவது, பேனர் வைப்பது, பாலாபிஷேகம் செய்வது உள்பட பலவிதங்களில் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது வாடிக்கையாகி வருகிறது...

கைது உத்தரவு எதிரொலி: நீதிபதி கர்ணன் தலைமறைவா?

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் அவர்களுக்கு மனநல சோதனை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவிட்டது...

நடிகைகளை ஆடையில்லாமல் பார்க்கத்தான் ரசிகர்கள் விரும்புகின்றார்களா? மஞ்சிமா மோகன்

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் நாயகி மஞ்சிமா மோகன் சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் 'ரசிகர்கள் நடிகைகளை ஆடையில்லாமல் பார்க்கவே தியேட்டருக்கு வருகிறார்களா? என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்...

அஜித்துடனான மோதலை தவிர்த்த விஜய்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜூன் 22ஆம் தேதி விஜய் பிறந்த நாளில் வெளியாகும் என்று கடந்த சில நாட்களாக செய்திகள் பரவி வந்தன. ஆனால் இதில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

தனுஷின் 'வடசென்னை' படப்பிடிப்பு குறித்த புதிய அப்டேட்

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'விஐபி 2' திரைப்படம் வரும் ஜூலை மாதம் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'வடசென்னை' படப்பிடிப்பில் தீவிரமாக உள்ளார்...