close
Choose your channels

பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய நடிகை

Thursday, May 31, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியின் அடுத்த பாகம் அடுத்த மாதம் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவுள்ளது. அதேபோல் தெலுங்கிலும் இந்த நிகழ்ச்சியை ஜுனியர் என்.டி.ஆர் நடத்தி வந்த நிலையில் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியை நடிகர் நானி தொகுத்து வழங்கவுள்ளார்.

இந்த நிலையில் தெலுங்கு பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களில் ஒருவராக நடிகை ஸ்ரீரெட்டி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சமீபத்தில் பாலியல் குற்றங்கள் குறித்து திரையுலக பிரபலங்களை குற்றஞ்சாட்டிய ஸ்ரீரெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்னும் என்னென்ன வெடியை கொளுத்த போகின்றாரோ என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீரெட்டியுடன் இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி, சார்மி கெளர், கீதா மாதுரி, சாந்தினி செளத்ரி, வருண் சந்தீஷ், ஆர்யன் ராஜேஷ், தனிஷ் உள்பட இன்னும் ஒருசிலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.