ஸ்ரீதேனாண்டாள் மூவீஸ் ரிலீஸ் செய்யும் அடுத்த பேய்ப்படம்

  • IndiaGlitz, [Sunday,August 30 2015]

கோலிவுட்டில் தயாராகும் பேய்ப்படங்கள் அனைத்தையும் மொத்த குத்தகைக்கு எடுத்தது போல பிரபல நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்' பல பேய்ப்படங்களை சமீபத்தில் ரிலீஸ் செய்து வந்துள்ளது. அனுஷ்கா ஷெட்டி நடித்த 'அருந்ததி' படத்தில் ஆரம்பித்த பேய்ப்பட பயணம் இன்னும் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டே உள்ளது.

சமீபத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்த படங்களில் 'காஞ்சனா, நஞ்சுபுரம், குட்டிப்பிசாசு, அரண்மனை, பிசாசு, டிமாண்ட்டி காலனி, ஆகிய படங்களும், விரைவில் ரிலீஸாகவுள்ள நயன்தாராவின் 'மாயா' படமும் பேய்ப்படங்கள் என்ற நிலையில் இன்னுமொரு பேய்ப்படத்தின் ரிலீஸ் உரிமையையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது. அந்த திரைப்படம்தான் ஸ்ரீகாந்த், லட்சுமிராய் நடித்த 'செளகார்பேட்டை'

ஸ்ரீகாந்த், லட்சுமிராய், விவேக், சரவணன், சம்பத்ராஜ், சுமன், கோவை சரளா, வடிவுக்கரசி, சிங்கம்புலி மற்றும் பலர் நடித்துள்ள 'செளகார்பேட்டை' படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைத்துள்ளார். வடிவுடையான் இயக்கியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

More News

'10 எண்றதுக்குள்ள' படப்பிடிப்பு முடிந்தது. செல்பியுடன் பிரிந்த சமந்தா

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடித்து வந்த '10 எண்றதுக்குள்ள' படத்தின் ராஜஸ்தான் படப்பிடிப்பை முடிந்துவிட்டு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர்...

சிம்புவை அடுத்து விஜய்யின் உதவியை பெற்ற கவுண்டமணி

இளையதளபதி விஜய்யின் உதவியால் சிம்புவின் 'வாலு' படம் வெளிவந்து சூப்பர் ஹிட் ஆகியுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே..

'புரூஸ் லீ'யில் ஒற்றுமையாகும் ஜி.வி.பிரகாஷ் - ராம்சரண் தேஜா

'டாலிங்' படத்தை அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடித்த 'த்ரிஷா இல்லைனா நயன்தாரா' திரைப்படம் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில்...

'புலி'யின் புதிய சாதனை. சிம்புதேவன் நன்றி

இளையதளபதி விஜய் நடிப்பில் சிம்புதேவன் இயக்கியுள்ள 'புலி' படத்தின் டிரைலர் கடந்த 19ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது...

'கவலை வேண்டாம்' படத்தினால் கவலை அடைந்த கீர்த்தி சுரேஷ்?

கோ, யான் ஆகிய படங்களை தயாரித்த ஆர்.எஸ் இன்ஃபோடையின்மென்ட் நிறுவனம் அடுத்து தயாரித்து வரும் திரைப்படம் 'கவலை வேண்டாம்'....