close
Choose your channels

ஸ்ரீதேனாண்டாள் மூவீஸ் ரிலீஸ் செய்யும் அடுத்த பேய்ப்படம்

Sunday, August 30, 2015 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கோலிவுட்டில் தயாராகும் பேய்ப்படங்கள் அனைத்தையும் மொத்த குத்தகைக்கு எடுத்தது போல பிரபல நிறுவனமான ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ்' பல பேய்ப்படங்களை சமீபத்தில் ரிலீஸ் செய்து வந்துள்ளது. அனுஷ்கா ஷெட்டி நடித்த 'அருந்ததி' படத்தில் ஆரம்பித்த பேய்ப்பட பயணம் இன்னும் வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டே உள்ளது.

சமீபத்தில் ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்த படங்களில் 'காஞ்சனா, நஞ்சுபுரம், குட்டிப்பிசாசு, அரண்மனை, பிசாசு, டிமாண்ட்டி காலனி, ஆகிய படங்களும், விரைவில் ரிலீஸாகவுள்ள நயன்தாராவின் 'மாயா' படமும் பேய்ப்படங்கள் என்ற நிலையில் இன்னுமொரு பேய்ப்படத்தின் ரிலீஸ் உரிமையையும் இந்த நிறுவனம் பெற்றுள்ளது. அந்த திரைப்படம்தான் ஸ்ரீகாந்த், லட்சுமிராய் நடித்த 'செளகார்பேட்டை'

ஸ்ரீகாந்த், லட்சுமிராய், விவேக், சரவணன், சம்பத்ராஜ், சுமன், கோவை சரளா, வடிவுக்கரசி, சிங்கம்புலி மற்றும் பலர் நடித்துள்ள 'செளகார்பேட்டை' படத்திற்கு ஜான் பீட்டர் இசையமைத்துள்ளார். வடிவுடையான் இயக்கியுள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.