பாகிஸ்தானுக்கு நன்றி கூறிய 'பாகுபலி 'இயக்குனர்

  • IndiaGlitz, [Wednesday,March 28 2018]

பிரமாண்ட இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2' ஆகிய இரண்டு படங்கள் உலகின் கவனத்தை தென்னிந்தியா பக்கம் திரும்ப வைத்தன. இதுவரை இந்திய சினிமா என்றால் இந்தி சினிமாதான் என்று பல நாடுகள் எண்ணியிருந்த நிலையில் தென்னிந்தியாவிலும் உலக தரத்தில் சினிமா தயாரிப்பவர்கள் இருக்கின்றனர் என்பதை நிரூபிக்க வைத்த படங்களில் பாகுபலி படமும் ஒன்று.

இந்த நிலையில் கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளிலும் நடந்த சினிமா விழாக்களில் பாகுபலியின் இரண்டு படங்களும் திரையிடப்பட்டதோடு இயக்குனர் ராஜமெளலியும் கெளரவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் பாகிஸ்தானில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும்படி ராஜமெளலிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.. இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி, 'பாகுபலி திரைப்படம் எனக்கு உலகின் பல நாடுகளுக்கு செல்ல உதவியது. இதில் பெரும் உற்சாகத்துக்குரிய விஷயம் என்னவெனில் பாகிஸ்தானில் இருந்தும் அழைப்பு வந்ததுதான். கராச்சியில் நடைபெறும் பாகிஸ்தான் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்ததற்காக பாகிஸ்தானுக்கு எனது நன்றிகள் என்று ராஜமெளலி தெரிவித்துள்ளார்.

More News

'மெர்சல்' சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தயாரிப்பு நிறுவனம்

'மெர்சல்' எங்கள் நிறுவனத்தின் பெருமைக்குரிய திரைப்படம். மேலும் தளபதி விஜய்யுடன் இணைந்து பணிபுரிந்ததை பெருமையாக கருதுகிறோம் என்று கூறியுள்ளனர்.

கர்நாடக தேர்தல் களத்தில் ராகுல் டிராவிட்டுக்கு தேடி வந்த பதவி

இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் டிராவிட்டுக்கு கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் நல்லெண்ண தூதர் பதவியை அளித்துள்ளது.

சகோதரருடன் உறவு கொண்டு குழந்தை பெற்ற பெண் கைது

அமெரிக்காவில் உள்ள புளோரிடோ மாகாணத்தை சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் தன் உடன்பிறந்த சகோதரருடன் செக்ஸ் உறவு கொண்டு குழந்தை பெற்றதாக கைது செய்யப்பட்டுள்ளார்

ஜோதிகாவை அடுத்து நயன்தாராவுக்கு கிடைக்கும் வாய்ப்பு

ஜோதிகாவை அடுத்து நயன்தாராவும் பாலிவுட் பட ரீமேக் ஒன்றில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

பாலிவுட்டுக்கு செல்கிறது பிக்பாஸ் ஜோடிகளின் திரைப்படம்

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருமே தற்போது திரையுலகில் நல்ல வாய்ப்புகளை பெற்று முன்னேறி வருகின்றனர்.