சட்டமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்ட மு.க.ஸ்டாலின் திடீர் கைது

  • IndiaGlitz, [Wednesday,June 14 2017]

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே குழப்பமான அரசியல் சூழ்நிலை இருந்து வரும் நிலையில் இன்று பெரும் பரபரப்புகளுக்கு இடையே தமிழக சட்டமன்றம் கூடியது. இன்று காலை 10 மணிக்கு சட்டமன்றம் கூடியவுடன் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து இரண்டு நிமிடங்கள் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பின்னர் ஜிஎஸ்டி மசோதாவை சட்டப்பேரவையில் வணிகவரித்துறை அமைச்சர் வீரமணி தாக்கல் செய்தார். இந்த சமயத்தில் கூவத்தூரில் நடந்த விவகாரம் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருப்பதால் இதுகுறித்து பேச அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இந்த நிலையில் 'எம்.எல்.ஏக்கள் விற்பனைக்கு' என்ற பதாதைகளுடன் திமுக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் தனபாலின் எச்சரிக்கையையும் மீறி தொடர்ந்து அமளியில் திமுக எம்.எல்.ஏக்கள் ஈடுபட்டதால் அனைவரையும் வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்பட அனைத்து திமுக எம்.எல்.ஏக்களும் சட்டமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இந்த நிலையில் வெளியேற்றப்பட்ட திமுக எம்.எல்.ஏக்கள் ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மட்டுமின்றி போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டது. எனவே சாலைமறியலில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டனர்.

More News

இன்று முதல் அடுத்தகட்டத்திற்கு செல்லும் சிவகார்த்திகேயனின் 'வேலைக்காரன்'

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்பதையும் இன்னும் பத்து நாட்கள் பேட்ச்வொர்க் மட்டுமே மீதமிருப்பதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம்...

'பாகுபலி' போன்ற படம் இயக்குவதை மிஸ் செய்தது எப்படி? சுசீந்திரன்

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் காலடி எடுத்த வைத்த இயக்குனர் சுசீந்திரன் 'அழகர் சாமியின் குதிரை', 'ஜீவா, 'பாண்டியநாடு', ஆதலினால் காதல் செய்வீர்', பாயும் புலி' போன்ற வெற்றி படங்களை இயக்கி இன்று கோலிவுட்டின் தவிர்க்க முடியாத முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ளார்.

ஈட்டியின் வெற்றிக்கூட்டணியில் மீண்டும் அதர்வா

கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவராகிய அதர்வா தற்போது 'செம போத ஆகாதே', 'இமைக்கா நொடிகள்', ஜெமினிகணேசனும் சுருளிராஜனும் உள்பட ஐந்து படங்களில் நடித்து வருகிறார்...

கொழுந்துவிட்டு எரிகிறது 27 மாடி கட்டிடம்: 300க்கும் மேற்பட்டோர் கதி என்ன?

சென்னை தி.நகரில் உள்ள 7 மாடி சென்னை சில்க்ஸ் கட்டிடம் தீக்கிரையாகி 15 நாட்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் இடிபாடுகள் முழுவதும் அகற்ற முடியாத நிலை உள்ளது.

உலகில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களின் பட்டியலில் 3 இந்தியர்கள்

உலகப்புகழ் பெற்ற பத்திரிகையான ஃபோர்ப்ஸ், உலகில் அதிகம் சம்பளம் பெறும் 100 நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்திய நடிகர்களான  ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்...