விஜய்க்கு நெருக்கமான ஸ்டில் போட்டோகிராபர் சாலை விபத்தில் மரணம்!

  • IndiaGlitz, [Tuesday,September 03 2019]

நடிகர் விஜய்க்கு நெருக்கமானவரும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் ஆஸ்தான புகைப்படக் கலைஞருமான ஸ்டில் கேமராமேன் சிவா என்பவர் நேற்று தேனி அருகே விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார். அவருக்கு கோலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சி தொடர் ஒன்றில் படப்பிடிப்பிற்காக தேனி சென்ற ஸ்டில் கேமராமேன் சிவா, படப்பிடிப்பு முடிவடைந்த பின்னர் சென்னைக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் பிரபல குணசித்திர நடிகர் குறும்பன் என்பவரும் பயணம் செய்தார். இவர்கள் பயணம் செய்த கார் தேனி அருகே உள்ள உத்தமபாளையம் என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது திடீரென விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஸ்டில்ஸ் சிவா சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார். நடிகர் குறும்பன் படுகாயமடைந்து உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜய் மட்டுமின்றி கோலிவுட் திரைதுறையில் முன்னணி நட்சத்திரங்கள் அனைவருடனும் பணிபுரிந்த ஸ்டில்ஸ் சிவாவின் மறைவு கோலிவுட் திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த விபத்து குறித்து தேனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

More News

இணையதளம் மூலம் மட்டுமே சினிமா டிக்கெட்: அமைச்சர் அறிவிப்பு

தற்போது திரையரங்கு டிக்கெட்டுக்கள் கவுண்ட்டர்கள் மற்றும் இணையதளம் ஆகிய இரண்டிலும் விற்பனையாகி வரும் நிலையில் விரைவில் தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் இணையதளம்

தனுஷின் அடுத்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்!

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் புதிய திரைப்படம் ஒன்றின் படப்பிடிப்பு தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்றும்,

சிபிராஜ் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!

சிபிராஜ் நடித்து வரும் 'ரங்கா' என்ற படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வினோத் இயக்கி வரும் இந்தப் படத்தில் சிபிராஜ் ஜோடியாக நிகிலா விமல் நடித்து வருகிறார்.

விஷ்ணுவிஷால் அடுத்த படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல்!

கடந்த ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'ராட்சசன்' மற்றும் 'சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில்

கவின், நீயும் லாஸ்லியாவும் வெளியே போங்கடா! சாண்டி ஆவேசம்

பிக்பாஸ் வீட்டில் இன்றைய ஓப்பன் நாமினேஷனில் சேரனையும் ஷெரினையும் கவின் நாமினேட் செய்தார் என்பது முதல் புரமோவில் இருந்து தெரிய வந்தது.