close
Choose your channels

கவின், நீயும் லாஸ்லியாவும் வெளியே போங்கடா! சாண்டி ஆவேசம்

Monday, September 2, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் வீட்டில் இன்றைய ஓப்பன் நாமினேஷனில் சேரனையும் ஷெரினையும் கவின் நாமினேட் செய்தார் என்பது முதல் புரமோவில் இருந்து தெரிய வந்தது. இதனையடுத்து இரண்டாவது புரமோவில் கவினும் வனிதாவும் பயங்கரமாக மோதிக்கொள்கின்றனர். சாக்சி உன்னால் தான் வெளியே சென்றார். சாக்சி இருந்திருந்தால் அவர் ஃபைனலுக்கு சென்றிருப்பார் என்றும், சாக்சியை உள்ளே கொண்டு வந்துவிட்டுவிட்டு நீ வெளியே போ என்றும் வனிதா ஆவேசமாக கூறினார். உள்ளே இருப்பதும் வெளியே போவதும் மக்களின் கையில் இருக்கின்றது என்பது தெரிந்தும் வனிதா இவ்வாறு கூறியது கவினையும் அவரது நண்பர்களையும் அதிர்ச்சியளிக்க வைத்தது

இந்த நிலையில் ஓப்பன் நாமினேஷன் செய்ய வந்த சாண்டி, கவினையும் லாஸ்லியாவையும் நாமினேட் செய்வதாக கூறினார். கவின் ஆரம்பத்தில் எப்படி இருந்தார் என்பது எனக்கு தெரியும். ஆனால் இப்போது அவனை என்னால் பார்க்க முடியவில்லை. அதனால் அவனையும் லாஸ்லியாவையும் நாமினேட் செய்வதாக தழுதழுத்த குரலில் கூறுகின்றார்

சாண்டியின் உணர்ச்சியை புரிந்து கொள்ளாமல் இந்த ஷோவில் செண்டிமெண்டுக்கு இடமில்லை என்றும் நீங்கள் அழுவதை பார்த்து மக்கள் சிரிப்பதாக வனிதா கூற, அதற்கு சாண்டி தக்க பதிலடி கொடுக்கின்றார். மொத்தத்தில் இன்றைய நாமினேஷன் படலம் காரசாரமான விவாதங்களுடன் இருக்கும் என தெரிகிறது.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.